இரண்டாவது கட்ட நடவடிக்கைகள் என்றால் என்ன?

தொற்றுதலின் வேகம் குறைந்து கொண்டு இருப்பதை கடந்த நாட்களில் அறியக்கூடியதாக உள்ளது. R0 எண்ணிக்கை இன்று 1 க்கு சமமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இது அரசாங்கம் விதித்துள்ள இறுக்கமான நெறிமுறைகளின் விளைவு ஆகும்.

R0 மூலம் கிடைக்கக்கூடிய தகவல்கள் தான் ஒரே உண்மையான நம்பகமான தரவு. இதன் அடிப்படையில் தான் அரசாங்கத்திற்கு அன்றாட நிலைமைக்கு திரும்புவதற்கான அறிகுறிகளைக் கொடுக்க முடியும்.

R0 எண்ணிக்கை 1க்கு குறைவாக போனால், தொற்றுதல் இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது என்று அர்த்தம். இது தான் நோய்ப்பரவு வளைவின் முடிவு கட்டம் என்று கூறப்படுகிறது.

இந்த கட்டத்தில் தான் அன்றாட வாழ்வுமுறைக்கு திரும்புவது சாத்தியக்கூடும் என்று இத்தாலிய உயர் சுகாதார அவையின் தலைவர் Locatelli தெரிவித்துள்ளார். அதற்கான திட்டங்கள் வகுக்கபடுகின்றன என்று கூறியுள்ளார்.

படிப்படியாக அன்றாட வாழ்வுமுறைக்கு திரும்புவதை அரசாங்கம் “இரண்டாவது கட்டம்” (Fase 2) என்று அழைக்கின்றது.

இந்த இரண்டாவது கட்டம் எப்பொழுது தொடங்கப்படும் என்பது குறிப்பிடப்படவில்லை. R0வின் போக்கு தான் இந்த திகதியை தீர்மானிக்கும்.
திகதி தீர்மானிக்கப்படாத பட்சத்திலும் இந்த இரண்டாவது கட்ட நடவடிக்கை எவ்வாறாக அமையும் என்பதை ஊகிக்க முடியும்.

இரண்டாவது கட்டத்தில், சமூக இடைவெளி எப்போதும் கடைப்பிடிக்கப்பட வேண்டியதாக இருக்கும். அதாவது, அந்நியர்களிடையே இரண்டு மீட்டர் வரை இடைவெளி, நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து பிரிந்திருத்தல் என்பன நீடிக்கப்பட வேண்டும்.

எந்த தொழிற்சாலைகள் மற்றும் வணிக கடைகள் திறக்கமுடியும் என்பதை R0 எண்ணிக்கை தான் தீர்மானிக்கும்.

கடைகள், bar மற்றும் உணவகங்களை மீண்டும் திறப்பதற்கு சீராக R0 = 0.5 ஐ எட்ட வேண்டும். கலியாட்ட விடுதிகள் (Hotel) மற்றும் விளையாட்டு அரங்கங்கள் போன்ற நெரிசலான இடங்களுக்கு முடிந்தவரை R0 = 0 க்கு அருகில் வரவேண்டும். இதனால்தான் அரசாங்கம் மற்றும் வல்லுநர்கள் வைரசை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தி வருகிறார்கள்.

அனைத்து விதிமுறைகளையும் நீக்கி சாதாரண வாழ்வுமுறைக்கு திரும்ப இன்னும் 1 மாதம் ஆகலாம். எனவே,Pasqua, 25 Aprile மற்றும் 1 Maggio ஆகிய விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வது, உறவினர்களோடு சேர்ந்து இருப்பது என்பன தவிர்க்கப்பட்டு வீட்டுக்குள் இருக்கவேண்டிய கட்டாயம் அமைந்துள்ளது.

அன்றாட வாழ்வுக்கு திரும்பினாலும் நாம் சில பழக்க வழங்கங்களை பழகிக்கொள்ளவேண்டும். அதாவது, முக கவசம், கையுறை அணிவது அனைவருக்கும் அன்றாட வாழ்க்கையில் ஒரு பழக்கமாக இருக்கும். இந்த பாதுகாப்புக்களை அணிந்தாலும் கை குலுக்குவது, அணைப்பது போன்றவை தவிர்த்துக்கொள்வது நல்லது.

வணிகங்கள். தொழில் நிறுவனங்கள்
மறு திறப்புகளின் பட்டியலில் முதலிடத்தில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (piccole e medie imprese) உள்ளன. ஆனால் ஏப்ரல் 14 ஆம் திகதியில் இருந்து மிகவும் கடுமையான அளவுகோல்களுடன் சில உணவு மற்றும் மருந்து உற்பத்திக்கான நிறுவனங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் அலுவலகங்களில் இருப்பதை குறைப்பதற்காக முடிந்த அளவில் Smart வேலைகளாக மாற்றி அமைக்க வேண்டும். மேசைகளுக்கு இடையில் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளியை மதிக்க வேண்டும். பாதுகாப்பு சாதனங்கள் இருந்தால் நல்லது, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளி நபர்கள் அலுவலகங்களுக்குள் நுழைந்தால் அதே விதிகளை மதிக்க வேண்டும்.

கடைகள்
வணிக வளாகங்கள் (Centri Commerciali) மறுதொடக்கம் செய்வது கடினம் என்றாலும், மற்ற கடைகள் மே மாத தொடக்கத்தில் திறக்கப்படலாம். தற்போது செயல்பாட்டில் உள்ள பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள் மற்றும் பிற வணிகங்களுக்கு நடைமுறையில் உள்ள விதிகள் அவற்றுக்கும் பொருந்தும்: கடையின் அளவைப் பொறுத்து வாடிக்கையாளர் அளவாக உள்ளே செல்லலாம் மற்றும் மக்களிடையே குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளியும் பேணப்பட வேண்டும்.

Bar மற்றும் உணவகங்கள்
Bar மற்றும் உணவகங்கள் (Ristoranti) திறப்பது இறுதியாக நடைபெறும். இப்போது இந்த இடைநிறுத்த காலத்தில் அவற்றை மறுசீரமைக்கவும், விதிகளுக்கு ஏற்ப ஏற்பாடு செய்வதற்காகவும் பயன்படுத்தலாம். அதாவது, மேசைகளுக்கிடையே 2 மீட்டர் இடைவெளி, பணியாளர்கள் முக கவசம் மற்றும் கையுறை உபயோகித்தல் போன்ற நெறிமுறைகளுக்கு தயார்படுத்தலாம்.

பொது போக்குவரத்து
பொது போக்குவரத்தை குறைந்த முறையில் பாவிக்க வேண்டும். பொது போக்குவரத்தை மேற்கொள்ளும்போது பாதுகாப்பு இடைவெளி கண்காணிக்கப்படும். பேரூந்து (Autobus), tram, தொடரூந்து (Treni) ஆகியவற்றில் அதிக பயணிகள் ஏறாமல் தடுப்பதற்கான வழிமுறைகளும் மேற்கொள்ளப்படும்.

உங்கள் கவனத்திற்கு