இத்தாலி வல்திலானா நகரசபையின் ஏற்பாட்டில்
06/07/2024 அன்று“பயணம் தொடர்கிறது” எனும் பெயரில், கடந்த ஆண்டு நடாத்திய நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, பல்லின மக்களின் ஒருங்கிணைவின் ஊடாக பொருளாதார வளர்ச்சியையும் ,வேலைவாய்ப்பையும் ஊக்குவிக்கும் ஒரு செயலியாக உணவை முன்நிறுத்தி ஏற்பாடு செய்யப்பட்டது.

மேற்படி நிகழ்வில்சர்வதேசளவில் மேற்கொள்ளப்பட்டுவரும் “Educazione alla cittadinanza globale” துறையில் இருந்து பிரபலமான தொண்டு அமைப்புக்களின் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வுக்கு ஈழத்தமிழர்கள் ஆகிய நாமும் சென்ற ஆண்டு போல் கலந்து கொண்டு தேசிய இனப்பிரச்சினையை விளக்கியதோடு தமிழின அழிப்பிற்கான நீதி கோரும் எமது கோரிக்கைகளை முன்வைத்து அவர்களின் ஆதரவையும் கோரியிருந்தோம். கலந்து கொண்ட அனைத்து அமைப்பினரும் தங்கள் ஆதரவை தருவதாக உறுதியளித்திருந்தனர்.

தமிழ் இளையோர்களால் இன அழிப்பு தொடர்பான காட்சிப்படுத்தல்களும் , போர் காலச் சூழலில் எமது மக்களை பட்டினிச்சாவில் இருந்து தேசியத்தலைவரால் எவ்வாறு தடுக்கப்பட்டது என்பது தொடர்பான காட்சிப்படுத்தல்களும் பலருடைய கவனத்தை ஈர்த்ததோடு இளையோர்களின் செயற்பாட்டை பாராட்டிச்சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கவனத்திற்கு