இத்தாலி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு .

இத்தாலிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய Antonino Iaria மற்றும் Chiara Appendino, இவர் முன்னார் Torino நகரசபை முதல்வரும் ஆவர் (2016-2022), இன்று வல்திலானா நகரசபைக்கு வருகை தந்திருந்த வேளையில் தமிழின அழிப்பு நினைவுத்தடத்தை பார்வையிட்டு பின்னர் தமிழ் இளையோர் செயற்பாட்டாளர் செல்வி மதுஷா குமரேசன் அவர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது எம்மினத்திற்கு நடந்த,நடந்துகொண்டிருக்கும் இன அழிப்பு வடிவங்களை மிகவும் ஆச்சரியத்தோடு கேட்டறிந்தவர்கள் தேர்தல் அரசியலைக் கடந்து நிச்சயமாக தமிழின அழிப்பிற்கான நீதிக்கான பாதையில் தங்களாலான பங்களிப்பை வழங்குவதாக உறுதியளித்திருந்தனர்.

உங்கள் கவனத்திற்கு