Lombardia வில் முக கவசம் அணிய வேண்டும்!

Lombardia மாநில ஆளுநர் Attilio Fontana


Lombardia வில் முக கவசம் அணிய வேண்டும் – ஆளுநர் Fontanaவின் புதிய உத்தரவு.


Lombardia மாநிலத்தில் ஏப்ரல் 5 முதல் வெளியே செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும் அல்லது உங்கள் மூக்கு மற்றும் வாயை “எளிய துணி மற்றும் sciarpe மூலம்” மறைக்க வேண்டும் என்று ஆளுநர் Fontana ஆல் புதிய கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தனிப்பட்ட மற்றும் மற்றவர்களின் பாதுகாப்பை நோக்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், குறைந்தபட்சம் ஏப்ரல் 13 வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் எனவும் Lombardia ஆளுநர் அறிவித்துள்ளார்.


மேலும், மார்ச் 21 அன்று அமுல்படுத்தப்பட்ட மாநில கட்டளைச் சட்டத்துடன் நிறுவப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் நடைமுறையில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.


மீண்டும் திறக்க அனுமதி பெற்ற கடைகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தடவை பாவிக்கக்கூடிய கையுறை மற்றும் கைகளை சுத்தம் செய்யும் மருந்துகள் கட்டாயம் வழங்கவேண்டும்.


மேலும், தங்கும் விடுதிகள் (hotel) , அங்காடிகள், அலுவலகங்கள் மற்றும் தேவையற்ற அனைத்து வணிகங்களும் மூடி இருக்கும். அத்தியாவசிய உணவு மற்றும் பொருட்கள் விநியோகிக்கும் கடைகளில் பள்ளி பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம். பூக் கடைகள் வீட்டுக்கு கொண்டு வந்து தரும் சேவையை உறுதி படுத்தும் பட்சத்தில் அவையும் திறந்து இருக்க அனுமதி உண்டு என புதிய உத்தரவில் தெரிவிக்கப் பட்டுள்ளது

உங்கள் கவனத்திற்கு