8ம் நாளாக ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

“காலத்திற்கேற்ப வரலாற்று கட்டாயத்திற்கமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை” – தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

தமிழீழ மண்ணின் விடுதலைக்காக இக்கால கட்டத்தில் பல அறவழிப்போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. எனவே 2009ம் ஆண்டு நடைபெற்று தொடர்ந்து கொண்டு இருக்கும் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை , தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு என்பதனை வலியுறுத்தி 22வது தடவையாக தொடரும் அறவழிப்போராட்டம் ஐ.நா முன்றலில் தொடர் 8 நாளாக உணவுத்தவிர்ப்பு போராட்டமாக தொடர்கின்றது. சம நேரத்தில் தாயகத்தில் தமிழீழ உணர்வாளர்களாலும் பிரித்தானியாவில் அம்பிகை அம்மையாலும் முன்னெடுத்த சாகும் வரையான உணவுத்தவிர்ப்பு போராட்டமும் எமது புனித இலட்சியத்தையே சர்வதேசத்திற்கு எடுத்தியம்பி நிற்கின்றது.

எனவே , இன்று (01.03.2021) பி.ப 2.30 மணியளவில் ஈகைப்பேரொளிகள் முருகதாசன், செந்தில்குமரன் திடலில் (ஐ.நா முன்றலில்) மாபெரும் எழுச்சிமிகு கவனயீர்ப்பு போராட்டம் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை மற்றும் தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதனை வலியுறுத்தி நடைபெற இருக்கின்றது. எனவே அனைத்து தமிழ் மக்களையும் எமது வரலாற்று கடமையாற்ற உரிமையோடு அழைக்கின்றோம்.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
சுதந்திர தமிழீழம் மலரட்டும்”

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

உங்கள் கவனத்திற்கு