Sicilia பிராந்தியம் அமுல்படுத்திய விதிமுறைகள்

கொரோனாவைரசின் தொற்று அதிகரித்து வருவதால் Sicilia பிராந்திய ஆளுநர் Nello Musumeci புதிய பிராந்தியக் கட்டளை ஒன்றை அமுல்படுத்தியுள்ளார்.

சனவரி 17 முதல் 31 வரை Sicilia பிராந்தியம் சிவப்பு மண்டலமாக மாற்றமடைகின்றது.

வணிகங்கள். உணவு மற்றும் அடிப்படை தேவைகள் விற்பனை தவிர அனைத்து சில்லறை வணிக நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. சலவை மையங்கள், சிகையலங்கார நிபுணர்கள், பத்திரிகைக் கடைகள், tabacchi மற்றும் மருந்தகங்கள் திறந்திருக்கும்.

Bar, pub, உணவகங்கள். காலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை வீட்டு விநியோகம் எப்போதும் அனுமதிக்கப்படுகிறது, ஆனால் இவற்றிற்கு உள்ளே அல்லது அருகில் உணவு மற்றும் பானங்கள் உட்கொள்வது தடைசெய்யப்படுகிறது.

பாடசாலைகள். மழலையர் பள்ளி, ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி முதலாம் ஆண்டு வரை நேரடி வகுப்புகள் நடைபெறும். இடைநிலைப்பள்ளி இரண்டாம், மூன்றாம் ஆண்டு மற்றும் உயர்நிலைப்பள்ளி வகுப்புகள் இணையவழியூடாக நடைபெறும். ஆனால் பாடசாலைகளின் ஆய்வகங்கள் பாவிப்பதற்கும் ஊனமுற்ற பிள்ளைகளை பள்ளி கல்வியில் இணைப்பதற்கும் நேரடி வகுப்புகள் நடைபெறலாம்.

உடற்பயிற்சி. வீட்டிற்கு அருகில் மட்டுமே தனிமையில் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். தனிநபர் கொண்ட விளையாட்டுகள் வெளிப்புறத்திலும் நபர்களுக்கு இடையில் இரண்டு மீட்டர் தூரத்தை கடைப்பிடித்தும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பிரார்ந்திய நகர்வுகள். நிரூபிக்கப்பட்ட வேலைத் தேவைகள், அவசரத் தேவைகள் மற்றும் சுகாதாரக் காரணங்களை தவிர பிராந்தியத்திலிருந்து வெளியேறுவதோ வேறு பிராந்தியாங்களிலிருந்து உள்நுழைவதோ தடை செய்யப்படுகின்றது. வசிக்கும் நகராட்சியிலிருந்து வெளியேற முடியாது.

நகராட்சி நகர்வுகள். நிரூபிக்கப்பட்ட வேலைத் தேவைகள், அவசரத் தேவைகள், சுகாதாரக் காரணங்களை மற்றும் உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு தவிர வசிக்கும் நகராட்சிக்குள் நடை மற்றும் வாகனங்கள் ஊடாகவோ நடமாட முடியாது.

பிரதமரின் ஆணையிலிருந்து வித்தியாசப்படும் ஒரு முக்கிய விடயம்: உறவினர், நண்பர்களைப் பார்வையிட அவர்களின் வீட்டிற்கு செல்ல முடியாது!

உங்கள் கவனத்திற்கு