கொரோனாவைரசு, அரசாங்கத்தின் புதிய உத்தரவு

நடன மையங்கள் போன்ற அனைத்து மையங்கள், வெளிப்புறங்கள் மற்றும் உட்புறங்களில் நடைபெறும் நடன வைபவங்கள் (discoteche) அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நாடு முழுவதிலும், முகக்கவசங்கள் பயன்படுத்துவது கட்டாயமாகும். வெளிப்புறங்கள், பொதுமக்களுக்கு திறந்திருக்கும் பொது இடங்கள் மற்றும் கூட்டங்கள் உருவாகுவது எளிதாக இருக்கும் இடங்களில் முகக்கவசங்கள் கட்டாயமாக அணிய வேண்டும்.

கொரோனாவைரசின் தொடர்ச்சியான தொற்றுதலின் அதிகரிப்பை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் Roberto Speranza தெரிவித்துள்ளார்.
ஓகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 7 வரையிலாவது இந்த முடிவு செல்லுப்படியாகும் என அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

அரசாங்க ஆணையை விட பிராந்தியங்களின் தனிப்பட்ட குறைந்த கட்டுப்பாட்டு விதிமுறைகள் அனுமதிக்கப்படாது.

உங்கள் கவனத்திற்கு