“Rilancio ஆணை ஒப்புதல்” பிரதமர் Conte யின் உரை

இத்தாலி பிரதமர் Giuseppe Conte

« மறுதொடக்கம் எனும் Rilancio ஆணை என்பது ஊழியர்கள், தொழிலதிபர்கள், பாடசாலைகள், வணிகர்கள், விளையாட்டு, மருத்துவம் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறைகளுக்கான 250 க்கும் மேற்பட்ட சட்டக்குறிப்புகளைக் கொண்ட ஒரு பெரிய ஆணை. 55 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு இரண்டு நிதியறிக்கைகள் கொண்டுள்ளன » என்று பிரதமர் Conte நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

மேலும் , «தற்போது நாடு உள்ள இக்கடினமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நாங்கள் இந்த ஆணையை உருவாக்கியுள்ளோம். பொருளாதார மற்றும் சமூக மீட்சிக்கான வாய்ப்புகளை மீண்டும் உருவாக்கும் நோக்கோடு நாங்கள் கடினமாக உழைத்துள்ளோம்» என்றும் தெரிவித்தார்.

சுயதொழில் செய்பவர்களுக்கான ஆதரவு

“தொழிலாளர்களுக்கு 25.6 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்காலிக பணிநீக்கங்கள் (cassa integrazione) மற்றும் சுயதொழில் செய்வோர்க்கான சலுகை (bonus autonomi) வலுப்படுத்துவதற்கான வளங்களும் உள்ளன” என்று Conte கூறினார். அத்துடன் “தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களை ஆதரிக்க சமூக மற்றும் பொருளாதார உதவிகள் மேன்மைப்படுத்தப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.

சுகாதாரம், பள்ளி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவு

2 பில்லியன் மற்றும் 250 மில்லியனுக்கு சமமான சுகாதாரப் பாதுகாப்புக்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 9600 செவிலியர்களை பணியில் அமர்த்துவது, 115% சதவிகிதம் தீவிர சிகிச்சை பிரிவுகள் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பாடசாலைகளைப் பொறுத்தவரை, 16 ஆயிரம் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். « 40 மில்லியன் நிதி ஒதுக்கீடு மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு காப்பகங்கள் வசதிகள் மேம்படுத்தப்படும். அதிகளவு வளங்கள் மருத்துவமனைகளுக்குச் செல்லும், ஏனெனில், “மருத்துவமனைகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நாம் அறிந்துகொண்டோம் » என்று சுகாதார அமைச்சர் Speranza வலியுறுத்தினார்.

Gualtieri: “மறுதொடக்கம் செய்வதற்கான அடித்தளத்தை அமைக்கிறோம்

« குடும்பங்கள், வணிகங்கள் மற்றும் சுகாதார அமைப்பை ஆதரிக்கவும் பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்வதற்கும் மீட்டெடுப்பதற்கும் நாங்கள் அடித்தளம் அமைத்துள்ளோம், மிகவும் கணிசமான வளங்களை ஒதுக்குவதன் மூலம் நாங்கள் அதைச் செய்கிறோம் » என்று பொருளாதார அமைச்சர் Gualtieri கூறினார்.

Bellanova: “விவசாயத்திற்கு ஒரு பில்லியன் மற்றும் 150 மில்லியன் நிதி ஒதுக்கீடு”

« விவசாய விநியோகச் சங்கிலியை ஆதரிப்பதற்காக இந்த நடவடிக்கை மூலம் 1 பில்லியன் மற்றும் 150 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன » என்று வேளாண் அமைச்சர் Bellanova தெரிவித்தார். மேலும், இன்று முதல், “கண்ணுக்கு தெரியாதது இனி கண்ணுக்குத் தெளிப்படும்”, என்று சட்டவிரோதமாக வேலையில் அமர்த்தப்படும் விவசாய தொழிலார்களை குறிப்பிட்டு கூறியுள்ளார்

Fraccaro: “பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மேம்பாட்டிற்கு Superbonus”

« எரிசக்தி செயல்திறனுக்கான 110% விகிதம் superbonus மற்றும் வீடுகளின் நில அதிர்வு தடுப்பு பற்றிய எனது முன்மொழிவுக்கான ஒப்புதல் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஒரு புரட்சியைக் குறிக்கிறது. இப்போது நிலையான வளர்ச்சியின் பெயரில் இத்தாலி மீண்டும் தொடங்க முடியும் » என்று துணை செயலாளர் Fraccaro கூறினார். எரிசக்தி வகுப்பை மேம்படுத்துவதற்கும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பை உருவாக்குவதற்கும், குடிமக்களுக்கு எந்த செலவும் இல்லாமல் வீட்டுவசதி மற்றும் பிரதேசத்தை பாதுகாப்பானதாக மாற்றவும் இந்த 110% superbonus வழிவகுக்கும் என தெரிவித்தார் .

உங்கள் கவனத்திற்கு