தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கு ஆராய்ச்சியாளர்களின் சவால்

நுண்நோக்கியில் SARS-CoV-2 – கொரோனாவைரசு

Covid-19க்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கு உலகெங்கிலும் உள்ள ஆய்வகங்களில் அயராது உழைக்கின்றார்கள். இந்த இலக்கை எட்டி மற்றும் அனைத்து உடல்களிலும் வைரசைத் எதிர்ப்பதற்கான எதிர்ப்புச் சக்திகளை தூண்டக்கூடிய பயனுள்ள தடுப்பூசியைக் கண்டுபிடித்ததும் தொற்றுநோய் தோற்கடிக்கப்படும்.

உலக நாடுகள் அனைத்திலும் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் மருந்துத்துறையின் பிரதான தொழிற்சாலைகளிலும் நோய்த்தடுப்புக்கான சர்வதேச ஆய்வுகள் உடனடியாக கட்டவிழ்த்து விடப்பட்டன. ஏறத்தாழ பத்து தடங்கள் பின்பற்றப்படுகின்றன, ஏற்கனவே எண்பது சூழ்நிலைகளில் ஆய்வக சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இருப்பினும், சிலர் மட்டுமே மனித பரிசோதனைகளை எட்டியுள்ளனர். இதுவரை அங்கீகரிக்கப்பட்ட ஐந்து ஆய்வுகள் கீழே தரப்படுகின்றது.

ஐக்கிய இராச்சியம்

Oxford பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் Imperial கல்லூரியும் மனிதர்கள் மீது ஒரு பரிசோதனையைத் தொடங்கியுள்ளன.
அரசாங்கம் Oxford பல்கலைக்கழகத்திற்கு 20 மில்லியனையும், Imperial கல்லூரிக்கு 22 மில்லியனையும் அதிகமாக ஒதுக்கீடு செய்யவுள்ளது. கோடைகாலத்திற்குப் பிறகு தடுப்பூசியைப் பயன்படுத்த உள்ளது, மேலும் செப்டம்பர் மாதத்தில் நோய்த்தடுப்பு மருந்து தயாராகும் என்பதும் சாத்தியமானது. இவ் வேட்புத் தடுப்பூசியின் பெயர் ChAdOx1 nCoV-19 ஆகும்.

ஜேர்மனி

BNT 162 எனும் பெயரைக் கொண்டுள்ள வேட்புத் தடுப்பூசியை தன்னார்வலர்கள் மீது பரிசோதிக்க Paul Ehrlich நிறுவனம் அங்கீகாரம் அளித்துள்ளது. இது 18 முதல் 55 வயதிற்குட்பட்ட 200 ஆரோக்கியமான மக்கள் மீது சோதிக்கப்படும், மேலும் கூடிய ஆய்வுகளைத் தொடரவும் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மதிப்பீடு செய்யவும் மருந்தின் சரியான அளவை தீர்மானிப்பது இதன் முதல் குறிக்கோளாகும்.
பின்னர், Covid-19ஆல் கடுமையாக பாதிக்கப்படுவதற்கு அதிக ஆபத்து உள்ள நபர்களில் இது சோதிக்கப்படும்.

அமெரிக்கா

Inovio Pharmaceuticals ஆல் உருவாக்கப்பட்ட Ino-4800 எனும் பெயரைக் கொண்ட வேட்புத் தடுப்பூசியை 40 தன்னார்வலர்களில் சோதனையிடுவதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதத்தில் ஆய்வுகளை நிறைவு செய்வற்தாக ஆய்வாளர்கள் முனைகிறார்கள். மேலும், நோயெதிர்ப்பு நிபுணர் Anthony Fauci தலைமையிலான நிறுவனத்தின் வேட்புத் தடுப்பூசி, பக்க விளைவுகள், தேவையற்ற எதிர்வினைகள் மற்றும் நோயெதிர்ப்புத் திறன் ஆகியவற்றைத் தூண்டும் திறனை மதிப்பிடுவதற்காக, 18 முதல் 55 வயது வரையிலான 45 பெரியவர்களில் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தத் தடுப்பூசி SARS-CoV-2 இன் Spike புரதத்தை மனிதனின் நோயெதிர்ப்புச் சக்தியின் தூண்டுதலுடன் குறியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆய்வு 2021ன் அரை ஆண்டில் நிறைவாகும் என நம்பப்படுகிறது.

சீனா

Cansino Biologics ஒரு மேம்பட்ட மருத்துவ சோதனைக் கட்டத்தில் உள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட, ஆரோக்கியமான 500 தன்னார்வலர்களில் சோதனை செய்யப்படும். ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர் என்றும் நோயெதிர்ப்புச் சக்தி வெவ்வேறு காலக்கெடுவுடன் மதிப்பீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்படுகிறது.

அறிவியல் சார்ந்து மேலதிக கட்டுரைகள்:
கொரோனாவைரசு: 5 மாதங்களில் விஞ்ஞானம் அறிந்தது என்ன?
R0 -“அடிப்படை இனப்பெருக்க எண்” என்றால் என்ன?

கொரோனாவைரசின் பரவுதலை நிறுத்துவதற்கான சில இலகுவான பரிந்துரைகள்.

உங்கள் கவனத்திற்கு