புதிய கொரோனவைரசு

கொரோன வைரசின் பரவுதலை நிறுத்துவதற்கான சில இலகுவான பரிந்துரைகள்.

  1. கைகளை தண்ணீர் சவற்காரத்தினால் நன்றாக கழுவவும்.
  2. கண் மூக்கு மற்றும் வாயை கைகளால் தொட வேண்டாம்.
  3. இவ் ஆபத்தான சூழ்நிலை நிறைவுபெறும் வரை மற்றவர்களுக்குக் கை கொடுப்பதையும், மற்றவர்களை கட்டி அணைப்பதையும் தவிர்க்கவும்.
  4. இருமல் மற்றும் தும்மல் வரும் பொழுது பேப்பர் (fazzoletti) அல்லது முழங்கையின் மடிப்பால் வாயையும் மூக்கையும் மறைக்கவும்.
  5. நெரிசலான அதிகளவு கூட்டமுள்ள இடங்களைத் தவிர்க்கவும்.
  6. ஏனைய நபர்களுடன் ஒரு மீட்டர் (1 metro) தூரத்தை கடைபிடித்தன் மூலம் நெருங்கிய தொடர்புகளைத் தவிர்க்கவும்.
  7. சளிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் வீட்டில் இருக்கவும். முதலுதவி மருத்துவமனைக்கோ (Pronto Soccorso) மருத்துவ அலுவலங்களுக்கோ செல்லாமல், பொது மருத்துவர், குழந்தை மருத்துவர் மற்றும் ஒவ்வொரு பிராந்தியத்தின் கட்டணமில்லா இலக்கத்திற்கு (Numero Verde Regionale) தொடர்பு கொள்ளவும்.

இத்தாலி தொடர்பான தமிழ் மொழியில் மேலதிக தகவலுக்கு
தமிழ் தகவல் மையம் (www.tamilinfopoint.it)

உங்கள் கவனத்திற்கு