மார்ச் 11 ஆம் திகதி இத்தாலி அமைச்சர்கள் சபையால் விடுக்கப்பட்ட ஆணைப் பதிவு.

(fonte: Governo.it)

மார்ச் 11 ஆம் திகதி அமைச்சர்கள் சபையின் தலைவரான ஜூசேப்பே கோன்தேயால் (Giuseppe Conte) விடுக்கப்பட்ட ஆணைப் பதிவு

எமது நாட்டில் இடம்பெறும் இவ் அவசரகால சூழ்நிலையை எதிர்ப்பதற்கு அயராது உழைத்து வரும் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்து எனது உரையை ஆரம்பிக்கின்றேன்.

வைரசின் பரவுதலை நிறுத்துவதற்கான இத்தாலி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மதித்து நடக்கும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். உங்கள் தியாகங்களால் இத்தாலி நாடு பெரும் நன்மைகளை அடைகின்றது என்பதால் நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

ஐரோப்பாவில் கொரோன வைரசால் அதிகளவில் பாதிக்கப்பட்ட முதலாவது நாடு எமது நாடக இருந்தாலும் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக பெரும் பலத்துடனும் கவனத்துடனும் இதை எதிர்த்து வருகின்றோம். எமது நாட்டைப் போன்ற ஒரு பெரிய மற்றும் நவீனமான நாட்டில், நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இக் கடினமான தருணத்தை எல்லோரும் புரிந்து கொண்டு படிப்படியாகத் தொடர வேண்டும்.

இப்போது நாங்கள் மேலதிகமான ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை தேவைக்கான மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், செய்தித்தாள் விற்கும் கடைகள், (tabacchi ) மற்றும் மருந்தகங்கள் தவிர ஏனைய வணிகக் கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.

இதனால் கடைகளில் உணவுப் பொருட்கள் வேண்டுவதற்கு அவசரப்பட தேவையில்லை.

இருப்பினும், 1 மீட்டர் (1 metro) பாதுகாப்பு தூரத்தை கடைப்பிடிப்பதற்கு உத்தரவாதம் அளிக்காத அனைத்து சிற்றுண்டி கடைகள், உணவகங்கள் (வீட்டுக்கு உணவு கொண்டு செல்லும் சேவை அனுமதிக்கப்படுகின்றது) சிகையலங்கார நிபுணர்கள், அழகு மையங்கள் மற்றும் Mensa சேவைகள் மூடுகின்றோம்.

தொழில்முறை வேலைகளைப் பொருத்தவரை, கூடிய அளவில் வீட்டிலிருந்து வேலை செய்வதை அதிகரிக்க வேண்டும். மேலும் ஊழியர்களுக்கு விடுமுறைகள் மற்றும் ஊதிய விடுப்பும் கொடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். தொற்றுநோயைத் தவிர்ப்பதற்காக தங்கள் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு நெறிமுறைகளை மேற்கொள்ளும், அனைத்து தொழிற்சாலைகளும் தொடர்ந்து செயல்படலாம்.

அத்தியாவசிய பொதுச் சேவைகள், போக்குவரத்து, வங்கி, தபால், நிதி, காப்புறுதி சேவைகள் மற்றும் விவசாய வேலைகள் மேற்கொள்ளப் படலாம்.

முதல் முக்கிய கட்டளை ஒன்று தான்: வேலைக்குப் போவதற்கும், சுகாதாரக் காரணங்களுக்கும், உணவுப் பொருட்கள் வாங்குவதற்கும் மட்டுமே வெளியே செல்ல வேண்டும். நாங்கள் அன்மைகாலமாகத் தான் இவ்வாறான நெறிமுறைகளைக் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளோம் என்பதை கருத்தில் கொண்டும், எமது முயற்சிகளின் விளைவுகளை குறுகிய நாட்களுக்குள் காணப்படாது என்பதை அறிந்து, சில வாரங்கள் காத்திருக்க வேண்டும்.

எல்லோரும் இந்த நெறிமுறைகளை கடைப்பிடித்து நடந்தால் வெகு விரைவில் இவ் அவசரகாலப் பிரகடனத்திலிருந்து நாம் வெளி வரலாம். எங்கள் நாட்டிற்கு எமது பொறுப்புணர்ச்சி அவசியமானது. இவ் அவசரகாலப் பிரகடனம் முடிவுக்கு வரும் வரை நாம் அனைவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான்.

நாளை எல்லோரும் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து மகிழ்வதற்காக இன்று விலகி இருப்போம்.

அனைவரும் சேர்ந்து வென்று வருவோம்.

இந்த ஆணையின் விதிகள் மார்ச் 12 ஆம் திகதி முதல் மார்ட்ச் 25 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப் படும்.

உங்கள் கவனத்திற்கு