கொரோனாவைரசு – தடுப்பூசி பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்

தொற்றுநோயியல் வளைவின் விரைவான எழுச்சியை கருத்தில் கொண்டு ஏனைய ஐரோப்பிய நாடுகளால் எடுக்கப்பட்ட தேசிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தவிர்த்து தடுப்பூசி பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவதே முதன்மை நோக்கமாக உள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

விரைவான பரிசோதனைகளால் (tampone rapido) வரக்கூடிய “தவறான எதிர்மறை விளைவு” காரணமாக மக்கள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கவும் அதனால் வைரசைப் பரப்பவும் அபாயம் இருக்கின்றது. ஆகையால், Covid-19 ஆல் தொற்றுகள் அதிகரிக்கும் பட்சத்தில், தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு அல்லது மூலக்கூறு பரிசோதனை (tampone molecolare) செய்தவர்களுக்கு மட்டுமே Green pass வழங்குவதாக விஞ்ஞானிகளால் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பானதாகக் கருதப்படும் அமைப்பு மூன்று குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டது:

  • 100 ஆயிரம் மக்களுக்கு புதிய வாராந்திர நோய்த்தொற்றுகள்,
  • தீவிர சிகிச்சைப் பகுதிகளில் அனுமதி பெறும் விகிதம்
  • மருத்துவப் பகுதிகளில் அனுமதி பெறும் விகிதம்.

இவை மூன்றும் உள்ளூர் மட்டத்தில் அதிக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க அனுமதிக்கிறதன. எல்லாவற்றிற்கும் மேலாக, வணிக மூடல்கள் மற்றும் ஊரடங்கு உத்தரவு போன்ற பிற கட்டுப்பாடுகளைத் தவிர்க்கவும் தேவைப்படுகிறன. அதனால்தான் இது மிகவும் பயனுள்ள நடவடிக்கையாக உள்ளது. வைரசு தொடர்ந்து பரவும் வரை இந் நடவடிக்கை கடைப்பிடிக்கப் படும். இருப்பினும், நிலைமை மோசமடைந்தால், மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

சிவப்பு மண்டலப் பகுதிகள் தீவிர நோய்ப் பரவல்களை தனிமைப் படுத்துவதற்காக சிவப்பு மண்டலப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் நெறிமுறைகளை மேற்கொள்ள ஆளுநர்கள் தயாராக உள்ளனர். கடந்த காலங்களில் வைரசின் சுழற்சியைக் குறைப்பதற்கும் அதன் மாறுபாடுகளைக் குறைப்பதற்கும் இவ்வாறான நடவடிக்கைகள் துல்லியமாகச் செயல்பட்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Green pass
எல்லாவற்றிற்கும் மேலாக, வேலை செய்வதற்கும் பொது இடங்களில் கலந்துகொள்வதற்கும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக green pass மிகச் சிறந்த கருவியாக அரசாங்கத்தால் கருதப்படுகிறது, இந்த காரணத்திற்காக இது இன்னும் பயன்படுத்தப்படும். Green pass சோதனைகளின் தரவு மிகவும் குறைவாகவே தொடர்வதால் இது வலுப்படுத்தப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் கோரிக்கையாக இருக்கின்றது.

உங்கள் கவனத்திற்கு