ஜூன் 3 முதல், Covid-19 தடுப்பூசிக்கான முன்பதிவு

தேசிய திட்டத்தின் கீழ், அனைத்து பிராந்தியங்களும் ஜூன் 3 முதல் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. உங்கள் பிராந்தியத்தின் அடிப்படையில் எப்படி, எங்கு முன்பதிவு செய்வது என்பது இங்கே:

ஜூன் 3 முதல், அனைத்து இத்தாலிய மக்களும், வயது அடிப்படையின்றி, Covid-19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்ய முடியும். இதை சமீபத்தில் Covid அவசர ஆணையர் Francisco Paolo Figliuolo அறிவித்துள்ளார். பலவீனமான நோயாளிகள், பராமரிப்பாளர்கள், ஏனைய தீவிர நோய்கள் உள்ளவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக, 12 முதல் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான AIFA இன் அனுமதி விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது – எனவே இளம் பருவத்தினரிருக்கும் தடுப்பூசி விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CALABRIA
ஜூன் 3 முதல் மாலை 4 மணியிலிருந்து அனைத்து வயதினருக்குமான தடுப்பூசி முன்பதிவு திறக்கிறது. இப் பிராந்தியத்தில் வசிப்பவர்கள், இத்தாலிய தபால் அலுவலக (Poste Italiane) தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம், அல்லது கட்டணமில்லா எண் 800 00 99 66 ஐ அழைக்கலாம் அல்லது 3399903947 எண்ணுக்கு குறுஞ்செய்தி (sms) அனுப்பலாம். ஏணைய தகவலுக்கு பிரத்யேக சிவில் பாதுகாப்பு எண்ணை தொடர்பு கொள்ளலாம்: 0961 789775.

CALABRIA – தடுப்பூசிக்கான முன்பதிவு தளம்

EMILIA ROMGNA ஜூன் 3 முதல், அனைத்து மக்களும், Covid-19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்து கொள்ளலாம். வலைப்பக்கத்தின் மூலமாகவோ அல்லது உங்கள் குடும்ப மருத்துவரைத் தொடர்புகொள்வதன் மூலமாகவோ முன்பதிவு செய்யப்படுகிறது.

EMILIA ROMAGNA – தடுப்பூசிக்கான முன்பதிவு தளம்

LAZIO
Covid தடுப்பூசிகள் பற்றிய அனைத்து தகவல்களும், யார், எவ்வாறு முன்பதிவு செய்யலாம் என்பன பிராந்தியத்தின் இணையதளத்தில் ஆலோசிக்க முடியும். எல்லா வயதினருக்குமான தடுப்பூசி, வலைத்தளம் அல்லது 06 164161841 என்ற எண்ணுக்கு அழைப்பதன் மூலம் முன்பதிவு மேற்கொள்ளலாம் .

LAZIO – தடுப்பூசிக்கான முன்பதிவு தளம்

LIGURIA
ஜூன் 4 முதல், 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 35-59 வயதுக்குட்பட்டவர்களுக்கான முன்பதிவு ஜூன் 4 முதல் தொடங்கியுள்ளது. ஜூன் 7 முதல் 30-34 வயதுடையவர்களும், ஜூன் 8 அன்று 25-29 வயதுடையவர்கள், ஜூன் 9 அன்று 20-24 வயதுடையவர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் புதுப்பிப்புகளைப் பின்பற்றுவது நல்லது மற்றும் முன்பதிவிற்கான பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு Liguria ஆளுநர் அறிவித்துள்ளார் .

LIGURIA – தடுப்பூசிக்கான முன்பதிவு தளம்

LOMBARDIA
தற்போது, ​​1991 இல் பிறந்தவர்கள் உட்பட 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏற்கனவே Lombardia பிராந்திய வலைப்பக்கத்தில் தடுப்பூசி பதிவு செய்யலாம். ஊடக அறிக்கையின்படி, 16 வயது முதல் 29 வயது வரையிலான 30 வயதிற்குட்பட்டவர்களுக்கான முன்பதிவு ஜூன் 2 ஆம் திகதி முதல் தொடங்கியுள்ளது. வலைத்தளம் மட்டுமின்றி, கட்டணமில்லா எண் 800 894 545, போஸ்டாமாட் மற்றும் தபால்காரர் மூலம் முன்பதிவு செய்யலாம்.

LOMBARDIA – தடுப்பூசிக்கான முன்பதிவு தளம்

PIEMONTE
பிராந்தியத்தின் வலைப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, மே 28 க்கு முன்பே 30-39 வயதுடையவர்களால் தடுப்பூசி பெறுவதற்கான ஆதரவை வெளிப்படுத்தலாம். ஜூன் 3 முதல், 16-29 வயதினருக்கான முன் அணுகல் தொடக்கியுள்ளது.

PIEMONTE – தடுப்பூசிக்கான முன்பதிவு தளம்

PUGLIA
ஜூன் 3 முதல், 1982 மற்றும் 1986 க்கு இடையில் பிறந்தவர்கள் முன்பதிவு செய்ய முடியும். ஜூன் 5 முதல், 1987 முதல் 1991 வரை பிறந்தவர்களும், ஜூன் 11 வரை, 2002 முதல் 2005 வரை பிறந்தவர்களும் முன்பதிவு செய்யலாம். lapugliativaccina.it 1981 வரை பிறந்தவர்கள் இணையத்தளம் ஊடாக முன்பதிவு செய்யலாம்.
இருப்பினும், தடுப்பூசிகள் வயது அடிப்படையில் படிப்படியாக நிர்வகிக்கப்படும்.
பிற முன்பதிவு முறைகளாக, கட்டணமில்லா எண் 800 71 39 31 திங்கள் முதல் சனிக்கிழமை வரை 8:00 முதல் 20:00 வரை செயலில் உள்ளன மற்றும் FARMACUP சேவைக்கு அங்கீகாரம் பெற்ற மருந்தகங்களிலும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

PUGLIA – தடுப்பூசிக்கான முன்பதிவு தளம்

SARDEGNA
ஜூன் 4 முதல் முன்பதிவு அனைவருக்கும் திறந்திருக்கும். மே 14 வெள்ளிக்கிழமை முதல் Sardena வில் Covid-19 தடுப்பூசிக்கான முன்பதிவு முறை மாறிவிட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். Poste Italiane வலைத்தளமூடாக முன்பதிவு செய்யலாம். மாற்றாக, உதவி எண் 800 009966 (ஒவ்வொரு நாளும் 8.00 முதல் 20.00 வரை செயலில் உள்ளது), Atm உள்ள தபால் நிலையங்களிலும், மற்றும் மே 18 முதல் தபால்காரர்கள் மூலமாகவும் முன்பதிவு மேற்கொள்ளலாம் .

SARDEGNA – தடுப்பூசிக்கான முன்பதிவு தளம்

SICILIA
ஜூன் 3 ஆம் திகதி முதல் அனைவருக்கும் முன்பதிவு திறக்கப்பட்டுள்ளது. Poste Italiane தளத்தின் மூலம் பதிவு செய்யலாம். தடுப்பூசிக்கு சேரக்கூடிய பிரிவுகள் பிராந்தியத்தின் சுகாதார வலைத்தளத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

SICILIA – தடுப்பூசிக்கான முன்பதிவு தளம்

VENETO
ஜூன் 3 முதல் அனைவருக்குமான தடுப்பூசி ஆரம்பித்துள்ளது. வலைத்தளம் மூலம் முன்பதிவைத் தொடர, தங்களது Ulss உதவி நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து வரிக் குறியீட்டை (codice fiscale) சமர்ப்பிக்க வேண்டும். ஏனைய தகவலுக்கான கட்டணமில்லா எண் 800 462 340 மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

VENETO – தடுப்பூசிக்கான முன்பதிவு தளம்

உங்கள் கவனத்திற்கு