இத்தாலியில் அனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு 2021

இத்தாலி  தமிழ்க் கல்விச்சேவையினால் அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனுசரணையுடன் இந்த ஆண்டு நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு இன்று, 12.06.2021 ஆம் நாள் இத்தாலியில் நாடுதழுவிய வகையில் 10 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. இத்தேர்வில் தமிழ் ஆண்டு 1 தொடக்கம் பன்னிரண்டாம் ஆண்டு வரையில் கல்விபயிலும் 200க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றினர். கொரோனா பேரிடருக்கு மத்தியிலும் தம் தாய்மொழியைக்கற்று ஆர்வத்துடன் தேர்வு எழுதிய மாணவர்களை வாழ்த்துவதுடன், அவர்களை ஊக்குவித்து வழிநடத்தும் பெற்றோரைப் போற்றுகிறோம்.

நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான நடைமுறைகளைப்பேணி இத்தேர்வினைச் சிறப்பாக நடாத்துவதற்காகத் இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையின் பிரதேச பொறுப்பாளர்கள் ,நிர்வாகத்தினர் ,ஆசிரியர்கள் ஆகியோர் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். இத்தேர்வு நிறைவாக நடைபெற உழைத்த அனைவருக்கும் தமிழ்க் கல்விச்சேவை நன்றி தெரிவிக்கின்றது.

உங்கள் கவனத்திற்கு