மாணவர் எழுச்சி தேசத்தின் மலர்ச்சி – இணையவழி மாநாடு

தமிழ் மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு 06/06/2021 அன்று மாணவர் எழுச்சி தேசத்தின் மலர்ச்சி எனும் தலைப்பில் இணையவழி மாநாடு நடைபெற்றது. தாயகத்திலும் இத்தாலி நாட்டிலும் வாழும் தமிழ் மாணவர்கள் இணைந்து இந்த மாநாட்டை நடாத்தினார்கள்.

ஈழத்தில் எமது தமிழ் மாணவர்களின் இன்றைய நிலவரம், சிங்கள அரசு தொடுக்கும் பல அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் மாணவ சமுதாயம் எவ்வாறு போராடுகின்றது என்பதையும் இத்தாலி மண்ணில் வாழும் தமிழ் மாணவர்கள் தங்களுடைய பணிகள், திட்டமிடல்கள், அடுத்த தலைமுறையினரை வழிநடத்திச் செல்லும் செயற்பாடுகள் பற்றி பகிரப்பட்டது.

தாயகத்திலும் புலத்திலும் வாழும் தமிழ் மாணவர்களுக்கிடையிலுள்ள உறவை மேலும் வளர்ப்பதற்கான எதிர்கால திட்டங்கள் மற்றும் அடுத்த சந்ததியினரை தேச விடுதலைப் பற்றுடன் வழிநடத்திச் செல்வதற்கான பணிகளும் இன்னும் மேம்படுத்தப்படும் என்றும் தமிழ் மாணவர் எழுச்சி நாளில் உறுதி எடுக்கப்பட்டது.

காலங்கள் உருண்டோடி சென்றாலும், தமிழர்களின் விடுதலை தாகம் ஒரு போதும் தணியாது என்பதற்கான முக்கிய எடுத்துக்காட்டு இன்றைய எமது இளைய சமுதாயமே. தாயகம் விடியும் வரை தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்ட இலட்சியத்துடன் அயராமல் போராடுவோம்!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

உங்கள் கவனத்திற்கு