மாணவர் எழுச்சி தேசத்தின் மலர்ச்சி
தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தனது வாழ்வைத் தியாகம் செய்தவர் பொன் சிவகுமாரன்.
அவருடைய ஓர்மத்தில் அன்று முதல் இன்று வரை எமது தமிழ் மாணவர்கள் சிங்கள இனவாத அரசிற்கு எதிராக தங்களது புரட்சிக்குரலை எழுப்பி தங்களது உரிமைகளை நிலைநாட்ட போராடுகின்றார்கள். தாயகம் நோக்கிய ஒன்றுபட்ட சிந்தனையுடன் தாயகத்தில் வாழும் எமது தமிழ் மாணவர்களின் போராட்டங்களுக்கு பக்கப்பலமாக நிற்கின்றார்கள் புலம்பெயர் வாழ் தமிழ் மாணவர்கள்.
குறுகிய காலத்திற்குள் பல்வேறுபட்ட திட்டங்களை வகுத்து அதற்கு செயல் வடிவம் கொடுத்து சர்வதேசத்தின் பார்வையை தமிழினத்தின் மீது திருப்பிய அதி முக்கிய பங்கு எங்கள் தமிழ் மாணவர்களையே சாரும்.
மேலும், அதிவேகமாக வளர்ந்துவரும் நவீன உலகத்தில் ஒரு தரமான வேலைவாய்ப்பு வழங்கப்படுவதற்கு கல்வியையும் தாண்டி, எம் இளையோர்களை தனிப்பட்ட முறையில் எவ்வாறாக ஆளுமை வாய்ந்தவர்களாக வளர்த்துக்கொள்கிறோம் என்பதை இன்று எங்களுடன் பகிரவுள்ளார்கள்.
அந்த வகையில், அவர்களுக்கு பக்கப்பலமாக நின்று அவர்களை தொடர்ச்சியாக, பொறுப்பாக விடுதலைப் பாதையில் முன்னகர்த்திச் செல்வதும் அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிப்பதும் பெற்றோர்களாகிய எங்களுடைய பாரிய கடமையாகும்.
இதை உணர்த்தும் வகையில், இன்று 06/06/2021 தமிழ் மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு, தாயகத்திலும் இத்தாலி மண்ணிலும் வாழும் தமிழ் மாணவர்கள் ஒன்றிணைந்து “மாணவர் எழுச்சி தேசத்தின் மலர்ச்சி” எனும் தலைப்பில் மாலை 19 மணிக்கு இணையவழி மாநாடு ஒன்றை ஒழுங்கு செய்து தங்களுடைய அனுபவங்கள், உணர்வுகள் மற்றும் திட்டங்களை பற்றி பகிரவுள்ளார்கள்.
அனைவரும் இதில் கலந்துகொண்டு தமிழீழ தேசிய மலர்ச்சிக்காக போராடும் எமது மாணவர்களின் எழுச்சிக்கு வலுச்சேர்ப்போம் வாரீர்!