அனைத்துலக கல்வி மேம்பாட்டு பேரவையின் மேம்படுத்தப்பட்ட தமிழ் பாடநூல் வெளியிட்டு நிகழ்வு

இளைய தலைமுறையினரின் தமிழ்க் கல்வியையும் இன இருப்பையும் முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட பாடநூல்களை 11 நாடுகளில் ஒரே நாளில், இன்று 05/06/2021, வெளியீடு செய்கின்றது அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை. ஒவ்வொரு நாட்டிலும் இயங்கும் கல்விக்கழகங்களின் பங்களிப்பை முதன்மைப்படுத்தியும் இந்த நூல்கள் வெளியிடப்படுகின்றன. விடுதலை வீரன் சிவகுமாரன் அவர்களின் படத்திற்கு ஈகைக்ச்சுடர் ஏற்றி அகவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.

இத்தாலி பியல்லா கலாச்சாரமண்டபத்தில் கல்விப்பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் முன்னிலையில் மிகவும் சிறப்புடன் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. அனைத்து நாடுகளிலும் மிகச்சிறப்புடன் இடம்பெற்ற மேம்படுத்தப்பட்ட தமிழ் நூல்கள் வெளியீட்டு நிகழ்வு இணையவழி ஊடாகவும் ஒளிபரப்பப்பட்டது.
அத்துடன் இந்நூலாக்கத்திற்கு துணைபுரிந்த அனைவருக்கும் மதிப்பளிப்பும் இடம்பெற்றது. இந்நிகழ்வினை மிக நேர்த்தியாக தமிழ்த் தேசிய தொலைக்காட்சி (TTN) ஒளிபரப்பியமை    குறிப்பிடத்தக்கது.

தமிழராய் வாழ்வோம், தமிழில் பேசுவோம், தமிழால் இணைவோம்!

உங்கள் கவனத்திற்கு