லண்டனில் அம்பிகை அம்மாவின் இல்லத்திற்கு முன்பாக தமிழ் உணர்வாளர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

கடந்த 15 நாட்களாக நான்கு கோரிக்கைகளை முன்வைத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருமதி அம்பிகை செல்வகுமார் அவர்களை கண்டு கொள்ளாத பிரித்தானிய அரசின் பொறுப்பின்மை காரணமாக, தமிழ் உணர்வாளர்களால் covid-19 யையும் பொருட்படுத்தாது “அம்பிகை அம்மா” அவர்களுக்கு ஆதரவாக தாமாக முன்வந்து வீதியில் இறங்கியது பிரித்தானிய அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
ஆர்ப்பாட்டத்தை கலைக்க முன்னெடுத்த நகர்வில் பிரித்தானிய காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். இக்கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து இளையோர் நடத்திய பெரும் அறவழி முயற்சியின் ஊடாக பின்பு விடுவித்து விட்டனர். இன்றைய போராட்டமானது இளையோர்களின் துணிவையும், இலட்சிய பற்றையும் பறைசாற்றியுள்ளது. மேலும் இப் போராட்டத்திற்கு வலுசேர்க்க இன்று பேர்லினிலும், ஒஸ்லோவிலும் கவனயீர்ப்பு போராட்டங்களும் “டொரொன்டோவிலிருந்து ஒட்டாவா” பாராளுமன்றம் நோக்கி நடை பயணமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனூடாக தமிழர் தமது விடுதலையை அடையும் வரை எந்நிலையிலும் தொடர்ந்து போராடும் இனமாகவே உள்ளார்கள் என்பதனை மீண்டும் நிலைநாட்டி உள்ளார்கள்.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”

உங்கள் கவனத்திற்கு