15 மார்ச் முதல் உயிர்த்த ஞாயிறு வரையிலான புதிய சட்ட ஆணை

15 மார்ச் முதல் 6 ஏப்ரல் வரை மற்றும் உயிர்த்த ஞாயிறு விடுமுறை தினங்களை உள்ளடக்கிய புதிய சட்ட ஆணையொன்றை அரசாங்கம் நேற்று பிறப்பித்துள்ளது.

தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட புதிய நடவடிக்கைகள் மார்ச் 15 முதல் 2021 ஏப்ரல் 6 வரையிலான காலத்திற்கு செல்லுபடியாகும். அவற்றுள்:

  • வாராந்திர தரவுகளின் அடிப்படையில் 1 லட்சம் மக்களுக்கு 250க்கு மேல் தொற்றுநோய்க்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு கொண்ட பிராந்தியங்கள் தானாகவே சிவப்பு நிற மண்டலமாக மாற்றமடையும்.
  • உருமாறிய புதிய கொரோனாவைரசுகளின் பரவல் கொண்ட பகுதிகள் தானாகவே சிவப்பு நிற பகுதிகளாக மாற்றமடையும்.

நிறப் பிரிவுகள்:

  • வெள்ளை: Sardegna;
  • செம்மஞ்சள்: Abruzzo, Toscana, Provincia Autonoma di Bolzano, Umbria, Calabria, Liguria, Sicilia, Valle d’Aosta;
  • சிவப்பு: Basilicata, Campania, Emilia Romagna, Friuli Venezia Giulia, Lazio, Lombardia, Marche, Molise, Piemonte, Provincia di Trento, Puglia, e Veneto.

தனியார் வீடுகளுக்கு நகர்வுகள்
மார்ச் 15 முதல் ஏப்ரல் 2 வரை, மற்றும் ஏப்ரல் 6 ஆம் திகதியும், செம்மஞ்சள் நிற பகுதிகளில், வசிக்கும் நகராட்சி பகுதியில் மட்டுமே, ஒரு தனியார் வீட்டிற்கு ஒரு நாளைக்கு ஒரு முறை, 05:00 முதல் 22 மணி வரை இருவர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது.

தனியார் வீடுகளுக்குச் செல்வதற்கான வாய்ப்பு சிவப்பு நிற பகுதிகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு விடுமுறை நாட்களுக்கான விதிமுறைகள்
ஏப்ரல் 3, 4 மற்றும் 5 ஆம் திகதிகளில், வெள்ளை நிற பகுதிகளைத் தவிர்த்து ஏனைய பிற நிற பகுதிகள் அனைத்திலும் சிவப்பு நிற பகுதிகளுக்கான விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒரே பிராந்தியத்தில் உள்ள பிற தனியார் வீடுகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு முறை செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஏற்கனவே அங்கு வசிப்பவர்களை விட இரண்டு பேரின் வருகைக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

உங்கள் கவனத்திற்கு