பொத்துவிலில் இருந்து பொலிகண்டிவரை தொடரும் நீதிக்கான பயணம்

ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு தமிழர் பகுதிகள் எங்கும் எழுச்சிகொண்டு சர்வதேசத்திடம் நீதி வேண்டி வரலாறு காணாத மக்கள் வெள்ளம் ஒன்று திரண்டுள்ளனர்.

தமிழர் உணர்வோடு ஒன்றிணைந்து சிங்கள பௌத்த பேரின வாதத்தின் பல தடைகளையும் தாண்டி இன்று யாழ் மண்ணை வந்தடைந்தனர்.

தியாகதீபம் திலீபனின் அகிம்சை வழிப்போராட்டத்தையும், இறுதிப் போரில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களையும், மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் வீரமரணமடைந்த மாவீரர்களையும், தமிழர் அடையாளங்களையும், நினைவுத்தூபிகளையும் அழித்து நினைவு கூரல்களுக்கு மக்களுக்கு தடை உத்தரவை விதித்த பௌத்த பேரின வாதத்தின் அடக்குமுறைகளைப் பொறுக்க முடியாத மக்கள் தமிழினத் தாகத்தை உலகறியச்செய்ய இனவிடுதலைக்கான அடுத்த அத்தியாயம் நிலத்திலும் புலத்திலும் ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளது.

உங்கள் கவனத்திற்கு