உங்களுக்கு கொண்டாட்டம் எங்களுக்கு திண்டாட்டம்

உங்களுக்கு கொண்டாட்டம் எங்களுக்குத் திண்டாட்டம் சிறிலங்காவின் 63வது சுதந்திர தினம் அன்று வடகிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களால் எழுப்பப்பட்ட கோசம் இது .

1948ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா ஆங்கிலேயரின் ஆட்சியில் இருந்து விடுபட்டு ஒரு சுதந்திர நாடாகப் பிரகடனப் படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது இருப்பினும் பூர்வீகக் குடிமக்களாக வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்கள் கரி நாளாக இந்நாளை அனுஷ்டித்து வருகின்றனர் .

அந்தவகையில் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்கள் இவ்வருடம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்ற ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தி வருகின்றனர் .
இப்பேரணி சமூக அமைப்புக்கள் ,மதத்தலைவர்கள் , அரசியல் கட்சிகள் , காணமல் ஆக்கப்பட்டோரின் அமைப்புக்கள் ,பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து மக்களை ஒன்றிணைத்து நடத்தி வருகின்றனர். இப்பேரணியில் ஸ்ரீலங்கா அரசின் நீதி மற்றும் படைத்துறை கட்டமைப்புகளை கொண்டு குளப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது .அடக்குமுறைகளை மீறி தொடர்ந்து போராட்டத்தினை நடத்தி வருவது வலிசுமந்த மக்களின் உறுதியின் வெளிப்பாடே.

சுதந்திர தின கொண்டாட்டம் மாத்திரமின்றி தமிழ் மக்களின் மனங்களை துன்புறுத்தும் பல்வேறு விதமான கொண்டாட்டங்களை கொண்டாடி வருகின்றனர் .ஒரே மக்கள் ஒரே நாடு ஒரே சட்டம் என்று கூறும் அரசாங்கம் அந்நாட்டு மக்களின் ஒரு இனத்தை இன அழிப்பு செய்து அதனை போர் வெற்றியாக கொண்டாடுவது ஸ்ரீலங்காவில் மட்டும் இடம்பெறும் ஒரு நிகழ்வாகும்.

அத்துடன் இன அழிப்புக்கு தலைமை தாங்கிய படைத்துறை அதிகாரிகளை சிவில் பணிகளுக்கான உயர் பதவிகளை வழங்கிவருகிறது .இன்னும் ஒரு பக்கம் தமிழ் மக்கள் குறிப்பாக வட கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் சொல்லொணா திண்டாட்ங்களை அனுபவித்து வருகின்றனர்.

தொல்பொருள்திணைக்களம் மற்றும் படை துறையினரின் உதவியுடன் நடைபெறும் நில அபகரிப்பு படையினரால் காணாமலாக்கப்பட்டோர் உறவினர்களின் அவலநிலை, அரசியல் கைதிகளின் விடுதலையை தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றமை, தமிழ் மக்களின் கல்வி கலை கலாச்சார பண்பாடுகளை சீரழிதல், தொடரும் கடத்தல்களும் காணாமல் ஆக்கப்படுவதும் ஆக தொடர்ச்சியான திட்டமிட்ட இன அழிப்பாகும்.
தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒற்றுமை என்பது சாத்தியப்படாத ஒன்றாக இருந்து வந்ததே வரலாறு இம்முறை ஒற்றுமை ஓரளவு சாத்தியப் பட்டிருப்பது எல்லோரும் இனத்தின் இருப்பிற்காக ஆற்றவேண்டிய பணியை புரிந்திருப்பதாக அறிய முடிகிறது.

மேலும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் கட்சிகளும் போராட்டத்தில் இணைந்து கொண்டிருப்பது ஒரு நல்ல விடமாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. அத்துடன் மலையகத் தமிழ் மக்களும் அரசியல் கட்சிகளும் ஆதரவு வழங்கி இருப்பது மேலும் வலுச்சேர்க்கிறது.

தமிழ் இனத்தின் விடுதலை என்ற இலட்சியத்தை நெஞ்சில் நிறுத்தி உறுதி கொண்ட மக்களாக ஒன்றுபட்டு நின்றால் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அழித்துவிட முடியாது என்ற எமது தேசிய தலைவரின் சிந்தனை போல் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்று இப்போராட்டத்தில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்பது மாத்திரமன்றி அடக்குமுறைகளை உடைத்து போராடும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அனைவரும் ஒன்றுபட வேண்டும் சிறிலங்கா அரசின் பல்வேறு கெடுபிடிகளையும் தடைகளையும் மீறி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை நடைபெறும் மக்கள் எழுச்சி போராட்டம் வெற்றிபெற உழைப்போம் .

உங்கள் கவனத்திற்கு