திங்கள் முதல் நிறம் மாறும் இத்தாலி

பிப்ரவரி 1 திங்கள் முதல் இத்தாலியின் அதிகபட்சமான பிராந்தியங்கள் மஞ்சள் மண்டலத்திற்குத் திரும்புகின்றன. ஐந்து பிராந்தியங்கள் மட்டும் செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும்: Umbria, Puglia, Sardegna, Sicilia மற்றும் Alto Adige. இங்கு என்ன செய்ய முடியும்?

மஞ்சள் மண்டலம்

நகர்வுகள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுக்கு இணங்க, வசிக்கும் பிராந்தியத்திற்குள் அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நகர முடியும். நிரூபிக்கப்பட்ட வேலை தேவைகள், அவசியமான சூழ்நிலைகள் அல்லது சுகாதார காரணங்களுக்காக மட்டுமே பிற பிராந்தியங்கள் அல்லது தன்னாட்சி மாகாணங்களுக்கான நகர்வுகள் அனுமதிக்கப்படுகின்றன. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. வேலை தேவைகள், அவசியமான சூழ்நிலைகள் அல்லது சுகாதார காரணங்களுக்காக மட்டுமே வெளியே செல்ல முடியும்.

உறவினர்கள் அல்லது நண்பர்கள் வீட்டிற்கு செல்லுதல் ஒரு நாளைக்கு ஒரு முறை, அதே பிராந்தியத்தில் அல்லது தன்னாட்சி மாகாணத்தில் வசிக்கும் மற்றொரு தனியார் வீட்டிற்கு, அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை, அதிகபட்சம் இரண்டு நபர்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றன. இவர்களுடன் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் ஒன்றாக வாழும் தன்னிறைவு இல்லாதவர்களை அழைத்து செல்ல முடியும்.

Bar மற்றும் உணவகம் அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை barகள், உணவகங்களுக்குள் உணவு மற்றும் பானங்களை உட்கொள்வது சாத்தியமாகும். அதே நேரத்தில், உணவு மற்றும் பானங்களை எடுத்துச் செல்வதற்கான விற்பனை அனுமதிக்கப்படுகிறது. எடுத்துச் செல்வதற்கான விற்பனை மாலை 6 முதல் இரவு 10 மணி வரையும் அனுமதிக்கப்படுகின்றது. நேர வரம்புகள் இல்லாமல் வீட்டு விநியோகம் அனுமதிக்கப்படுகிறது.

சிறு வணிகங்கள் மற்றும் centri commerciali பொது விடுமுறை மற்றும் விடுமுறைக்கு முந்தைய நாட்களில், மருந்தகங்கள், துணை மருந்தகங்கள், சுகாதார நிலையங்கள், உணவு விற்பனை நிலையங்கள் தவிர centri commerciali மற்றும் சந்தைகளுக்குள் உள்ள கடைகள் மூடப்படுகின்றன.

உடற்பயிற்சி சிகிச்சை நடவடிக்கைகளுக்கு, அத்தியாவசியமான உதவிகளுக்கு உட்பட்ட சேவைகளை வழங்குவது மற்றும் CONI அல்லது CIPஆல் அங்கீகரிக்கப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகள் மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டிய விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளித்தல் தவிர்த்து, உடற்பயிற்சி நிலையங்கள், நீச்சல் குளங்கள், ஆரோக்கிய மையங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. சமூக இடைவெளியை கடைப்பிடித்து அடிப்படை உடற்பயிற்சி நடவடிக்கைகளை வெளிப்புறத்தில் பிரத்தியேகமாக மேற்கொள்ள விளையாட்டு மையங்களுக்கும் செல்லலாம்.

செம்மஞ்சள் மண்டலம்

நகர்வுகள் ஒரே நகராட்சிக்குள் அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நகர முடியும். ஒரே நகராட்சியில், உறவினர்கள் அல்லது நண்பர்களின் வீட்டிற்கு அதிகபட்சம் 2 நபர்கள், 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் ஒன்றாக வாழும் தன்னிறைவு இல்லாதவர்கள் ஒரு நாளைக்கு ஒரு வருகை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. 5,000 மக்கள் வரை உள்ள நகராட்சியிலிருந்து 30 கிலோமீட்டருக்குள் நகர முடியும், ஆனால் மாகாண தலைநகரங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வேலை, சுகாதாரம் அல்லது தேவைக்காக மற்ற நகராட்சிகளுக்கு செல்ல முடியும். வசிக்கும் வீடு அல்லது குடியிருப்புக்குத் திரும்புவதற்கான வாய்ப்பைத் தவிர வேறு பிராந்தியங்களுக்கு செல்ல முடியாது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு உள்ளது. நகர்வதற்கு சுயஅறிவிப்புப்படிவம் தேவை.

Centri commerciali விடுமுறை நாட்களிலும் விடுமுறைக்கு முந்தைய நாட்களிலும் அவை மூடப்படும். மருந்தகங்கள், துணை மருந்தகங்கள், சுகாதார நிலையங்கள், உணவு விற்பனை நிலையங்கள், tabacchi, பத்திரிகைக் கடைகள், புத்தகக் கடைகள் உள்ளே திறந்தே உள்ளன.

பாடசாலைகள் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு (scuola superiore), குறைந்தது 50 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரை பாடசாலைகளில் கற்பித்தல். தொற்றுநோயின் முன்னேற்றத்தின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள், அதிபர்களின் தனிப்பட்ட முடிவின் அடிப்படையில், திறக்கப்படுகின்றன அல்லது மூடப்படுகின்றன.

உள்ளூர் போக்குவரத்து பள்ளி போக்குவரத்துக்கான வாகனங்களைத் தவிர, அதிகபட்சமாக 50 சதவீத நபர்கள் மட்டுமே வாகனங்களில் பயணிக்க முடியும்.

உணவகங்கள் மற்றும் கடைகள் Bar மற்றும் உணவகங்களுக்கு அருகாமையில் நுகர்வு தடைசெய்யப்பட்டுள்ளது. அதிகாலை 5 மணிமுதல் மாலை 6 மணி வரை எல்லா இடங்களிலிருந்தும் உணவு மற்றும் பானங்களை எடுத்துச் செல்லும் சேவை அனுமதிக்கப்படுகின்றது. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சமையலறை கொண்ட உணவகங்களிலிருந்து மட்டுமே இச் சேவை அனுமதிக்கப்படுகின்றது. நேர வரம்புகள் இல்லாமல் வீட்டு விநியோகம் அனுமதிக்கப்படுகிறது. மாலை 6 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தெருக்களில் அல்லது பூங்காக்களில் உணவு மற்றும் பானங்களை உட்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆடை போன்ற அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு கூட கடைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

அருங்காட்சியகங்கள், கண்காட்சிகள், திரையரங்குகள் மற்றும் நீச்சல் குளங்கள் மூடப்பட்டுள்ளன. விளையாட்டு மையங்கள் திறக்கப்படுகின்றன. வசிக்கும் நகராட்சியின் எல்லைக்குள் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும். பந்தய அறைகள், slot இயந்திரங்களின் செயல்பாடுகளும் bar மற்றும் tabacchiகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மத வழிபாடுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது.

உங்கள் கவனத்திற்கு