பிரதமர் Conteயின் புதிய ஆணை

கொரோனாவைரசு நோய்த்தொற்றின் பரவலை தடுக்கும் முகமாக, இத்தாலிய பிரதமர் Giuseppe Conte இன்னுமொரு புதிய ஆணையை வெளியிட்டுள்ளார். இது எதிர்வரும் நவம்பர் 6ம் திகதி முதல் டிசம்பர் 3ம் திகதி வரை செல்லுப்படியாகும்.

பரவுதலின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப, இத்தாலி நாட்டின் பிராந்தியங்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன:

மஞ்சள் (மிதமான ஆபத்து உள்ள பிராந்தியங்கள்): Abruzzo, Basilicata, Campania, Emilia Romagna, Friuli Venezia Giulia, Lazio, Liguria, Marche, Molise, Trento-Bolzano, Sardegna, Toscana, Umbria, Veneto.

 • இப் பிராந்தியங்களில், வேலை காரணங்கள், அவசரத் தேவைகள் மற்றும் சுகாதாரக் காரணங்களை தவிர இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 • அவசியமற்ற காரணங்களுக்காக நகர்வதை தவிர்ப்பது நல்லது.
 • விடுமுறை நாட்களில் பல்பொருள் வர்த்தக மையங்கள் (centri commerciali) மூடப்பட வேண்டும். இவற்றிற்குள் இயங்கும் மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் பத்திரிகைக் கடைகள் திறந்திருக்கும்.
 • அருங்காட்சியகம் மற்றும் கண்காட்சி மூடப்படுகின்றன.
 • குழந்தைகளுக்கான பள்ளி, ஆரம்பப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளுக்கான நேரடி வகுப்புகள் நடைபெறும் (scuola materna, scuola elementare, scuola media). உயர்நிலைப் பள்ளிகள் (scuola superiore) தொலைதூரக் கணினிவழிக் கல்வி வகுப்புகளாக நடைபெறும். பல்கலைக்கழகங்கள் மூடப்படுகின்றன.
 • பாடசாலைப் போக்குவரத்துச் சேவைகளை தவிர, ஏனைய பொது போக்குவரத்தில் 50 சதவீதமான நபர்களே பயணிக்க முடியும்.
 • பந்தய விளையாட்டு நிறுவனங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
 • Bar மற்றும் உணவகங்கள் மாலை 6 மணிக்கு மூடப்பட வேண்டும். வீட்டிற்கு உணவு எடுத்துச் செல்லும் சேவை இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படுகின்றது. வீட்டு விநியோகத்திற்கு (consegna a domicilio) நேர வரம்புகள் இல்லை.
 • நீச்சல் மையங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், திரையரங்குகள் மற்றும் சினிமாக்கள் மூடப்படுகின்றன. விளையாட்டு மையங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.

செம்மஞ்சள் (இடைநிலை ஆபத்து உள்ள பிராந்தியங்கள்): Sicilia, Puglia.

 • வேலை காரணங்கள், அவசரத் தேவைகள் மற்றும் சுகாதாரக் காரணங்களை தவிர இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிரூபிக்கப்பட்ட வேலை, படிப்பு, சுகாதார காரணங்கள் தவிர பிராந்தியங்கள் மற்றும் நகரங்களுக்கிடையிலான நகர்வுகள் தடை செய்யப்படுகின்றன. ஒரே நகராட்சிக்குள் ஒரு நாளில் தேவையற்ற நகர்வுகளை தவிர்ப்பது நல்லது.
 • வாரத்தின் ஏழு நாட்களும் bar மற்றும் உணவகங்கள் மூடப்படுகின்றன. வீட்டிற்கு உணவு எடுத்துச் செல்லும் சேவை இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படுகின்றது. வீட்டு விநியோகத்திற்கு (consegna a domicilio) நேர வரம்புகள் இல்லை.
 • விடுமுறை நாட்களில் பல்பொருள் வர்த்தக மையங்கள் (centri commerciali) மூடப்பட வேண்டும். இவற்றிற்குள் இயங்கும் மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் பத்திரிகைக் கடைகள் திறந்திருக்கும்.
 • அருங்காட்சியகம் மற்றும் கண்காட்சி மூடப்படுகின்றன.
 • குழந்தைகளுக்கான பள்ளி, ஆரம்பப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளுக்கான நேரடி வகுப்புகள் நடைபெறும் (scuola materna, scuola elementare, scuola media). உயர்நிலைப் பள்ளிகள் (scuola superiore) தொலைதூரக் கணினிவழிக் கல்வி வகுப்புகளாக நடைபெறும். பல்கலைக்கழகங்கள் மூடப்படுகின்றன.
 • பாடசாலைப் போக்குவரத்துச் சேவைகளை தவிர, ஏனைய பொது போக்குவரத்தில் 50 சதவீதமான நபர்களே பயணிக்க முடியும்.
 • பந்தய விளையாட்டு நிறுவனங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
 • Bar மற்றும் உணவகங்கள் மாலை 6 மணிக்கு மூடப்பட வேண்டும். வீட்டிற்கு உணவு எடுத்துச் செல்லும் சேவை இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படுகின்றது. வீட்டு விநியோகத்திற்கு (consegna a domicilio) நேர வரம்புகள் இல்லை.
 • நீச்சல் மையங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், திரையரங்குகள் மற்றும் சினிமாக்கள் மூடப்படுகின்றன. விளையாட்டு மையங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.

சிவப்பு (அதிக ஆபத்து உள்ள பிராந்தியங்கள்): Calabria, Lombardia, Piemonte, Valle d’Aosta.

 • வேலை காரணங்கள், அவசரத் தேவைகள் மற்றும் சுகாதாரக் காரணங்களை தவிர ஒரே நகராட்சிக்குள் எவ்வித நகர்வும் தடை செய்யப் படுகின்றது. பிராந்தியங்கள் மற்றும் நகரங்களுக்கிடையிலான நகர்வுகள் தடை செய்யப்படுகின்றன.
 • வாரத்தின் ஏழு நாட்களும் bar மற்றும் உணவகங்கள் மூடப்படுகின்றன. வீட்டிற்கு உணவு எடுத்துச் செல்லும் சேவை இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படுகின்றது. வீட்டு விநியோகத்திற்கு (consegna a domicilio) நேர வரம்புகள் இல்லை.
 • பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள், பெண்கள் ஆண்களுக்கான சிகையலங்கார நிபுணர்கள், சலவை மையங்கள் திறந்திருக்கும். அழகு மையங்கள் மூடப்பட வேண்டும்.
 • உயர்நிலைப்பள்ளி (scuola superiore) மற்றும் நடுநிலைப் பள்ளியின் இரண்டாம் மூன்றாம் (seconda, terza media) ஆண்டுகளுக்கு தொலைதூரக் கணினிவழிக் கல்வி நடைபெறும். குழந்தைகளுக்கான பள்ளி, ஆரம்பப்பள்ளி, நடுநிலைப் பள்ளியின் முதலாம் ஆண்டிற்கு (scuola dell’infanzia, scuola elementare, prima media) நேரடி வகுப்புகள் நடைபெறும்.
 • அனைத்து விளையாட்டு நிகழ்வுகளும் போட்டிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இத்தாலிய தேசிய ஒலிம்பிக் குழு (CONI) மற்றும் இத்தாலிய பாராலிம்பிக் குழுவால் (CIP) அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான போட்டிகள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. வீட்டிற்கு அருகிலும் தனிப்பட்ட முறையிலும் உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.
 • அருங்காட்சியகம், கண்காட்சி, திரையரங்குகள், சினிமாக்கள், உடற்பயிற்சி நிலையங்கள், பந்தய விளையாட்டு நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பாடசாலைப் போக்குவரத்துச் சேவைகளை தவிர, ஏனைய பொது போக்குவரத்தில் 50 சதவீதமான நபர்களே பயணிக்க முடியும்.

உங்கள் கவனத்திற்கு