Lombardia வில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

கொரோனாவைரசு தொற்று அதிகரிப்பினால் Campania மாநிலத்தைத் தொடர்ந்து Lombardia வில் அக்டோபர் 22 முதல் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுகிறது.

நிரூபிக்கப்பட்ட வேலை தேவைகள், அவசரத் தேவைகள் அல்லது சுகாதார காரணங்களுக்காக தூண்டப்பட்ட நகர்வுகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் தங்கள் வீடுகள், வேறு குடியிருப்புகளுக்குத் திரும்புவதற்கான அனுமதி மற்றும் ஊரடங்கின் போது நகர்வுகளுக்கான சுயஅறிவிப்புப் படிவம் வைத்திருத்தல் (autocertificazione) போன்றவை சுகாதார அமைச்சர் Roberto Speranza மற்றும் Lombardia பிராந்தியத்தின் ஆளுநர் Attilio Fontana ஆகியோரால் இன்று பிறப்பிக்கப்பட்ட கட்டளைச் சட்டத்தில் உள்ளடங்குகின்றன. மேலும், 13 நவம்பர் 2020 வரை இவ் விதிமுறைகள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. விதிமுறைகளை மீறும் பட்சத்தில் 400 முதல் 3000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது .

வணிக மையங்கள் மூடப்படுகின்றன

மேலும், இறுக்கமான விதிமுறைகள் கொண்ட இரண்டாவது கட்டளை புதன்கிழமை பிற்பகலில் கையெழுத்தானது. வார இறுதி நாட்களில் வணிக மையங்களை (centro commerciali) மூடுவது, வளாகத்தில் கூட்டம் வருவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், சமூக கண்காட்சிகள் மற்றும் பண்டிகைகளை நடத்துவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

தொலைநிலை கற்பித்தல் (didattica a distanza)

Lombardia வின் உயர்நிலைப் பள்ளிகளுக்கான (scuole superiori) பள்ளி செயல்பாடுகள் 26 அக்டோபர் முதல் தொலைதூரக் கல்வியுடன் மட்டுமே நடைபெறும். இது புதன்கிழமை பிற்பகல் கையெழுத்திட்ட உத்தரவு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளையாட்டு, போட்டிகள் இடைநிறுத்தம்; தனிப்பட்ட பயிற்சிக்கு நிறுத்தமில்லை

அமெச்சூர் தொடர்பு விளையாட்டுகள், உள்ளூர், மாகாண மற்றும் பிராந்திய விளையாட்டுப் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. தொற்று தடுப்பு நடவடிக்கைகள் கவனிக்கப்படுவதால் தனிப்பட்ட பயிற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.

உங்கள் கவனத்திற்கு