அரசாங்கத்தின் புதிய ஆணை

கொரோனாவைரசுத் தொற்றுதலின் அதிகரிப்பின் காரணமாக இன்று, 13/10/2020, இத்தாலிய அரசாங்கம் ஒரு புதிய ஆணையை வெளியிட்டுள்ளது. அதன் அம்சங்கள் இங்கே.

எப்போதும் சுவாசப் பாதுகாப்பு சாதனங்கள் வைத்திருப்பது கட்டாயமாகும், அதே போல் தனியார் வீடுகளைத் தவிர மற்ற உட்புற இடங்களிலும், எல்லா வெளிப்புற இடங்களிலும் அவற்றை அணிய வேண்டிய கட்டுப்பாடு உள்ளது. விளையாட்டில் ஈடுபடுபவர்கள், 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள், முகக்கவசத்தைப் பயன்படுத்துவதற்கு பொருந்தாத நோயியல் மற்றும் குறைபாடுகள் உள்ளவர்கள் இக் கட்டாயத்திலிருந்து விலக்கப்படுகிறார்கள். தனியார் வீடுகளில் கூட்டுறவு இல்லாத பட்சத்தில் (அதாவது ஒரே குடும்ப வீட்டில் வசிக்காதவர்கள்) பாதுகாப்புச் சாதனங்களைப் பயன்படுத்துவது “கடுமையாக பரிந்துரைக்கப்படுகிறது”.

வைபவங்கள்: நடன அரங்குகள், உட்புறங்களில் மற்றும் வெளியில், மூடப்பட்டிருக்கும், அதே நேரத்தில் கண்காட்சிகள் மற்றும் மாநாடுகள் அனுமதிக்கப்படுகின்றன. முந்தைய ஆணையுடன் ஒப்பிடும்போது புதுமை என்னவென்றால், அனைத்து உட்புற மற்றும் வெளிப்புற இடங்களிலும் விழாக்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. திருமணங்கள் போன்ற சிவில் அல்லது மத சடங்குகள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நெறிமுறைகளால் நிறுவப்பட்ட விதிகளுக்கு ஏற்றவாறு அனுமதிக்கப்படுகின்றன. மத சடங்குகளுக்கு தொடர்ச்சியாக நடைபெறும் விழாக்கள் (விருந்துபசாரம்) அதிகபட்சமாக 30 நபர்களின் பங்கேற்புடன் நடைபெறலாம். தனியார் வீடுகளில் “விழாக்களை தவிர்த்து, 6 க்கும் மேற்பட்ட கூட்டுறவு அற்ற (ஒரே குடும்ப வீட்டில் வசிக்காதவர்கள்) நபர்களின் அழைப்பையும் தவிர்ப்பது கடுமையாக பரிந்துரைக்கப்படுகிறது.

பள்ளிப் பயணங்கள்: கல்வி பயணங்கள், வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்கள் மற்றும் அனைத்து மட்டங்களிலும் உள்ள கல்வி நிறுவனங்களால் திட்டமிடப்பட்ட கல்வி பயணங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இரவு வாழ்க்கை: பார்கள் (bar), உணவகங்கள், விடுதிகள், பனிக்கூழ் கடைகள், மற்றும் pubகளின் செயல்பாடுகள், மேசைகளுக்கான சேவைகளுடன் இரவு 12 மணி வரையும் மேசைகளுக்கான சேவை இல்லாத நிலையில் இரவு 9 மணி வரையும் அனுமதிக்கப்படுகின்றன. வீட்டிற்கு உணவு எடுத்துச் செல்லும் சேவை அனுமதிக்கப்படுகின்றது, ஆனால் இரவு 9 மணிக்குப் பிறகு அந்த இடத்திலோ அல்லது அருகிலோ நுகர்வு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சினிமா மற்றும் இசை நிகழ்ச்சிகள்: உட்புறத்தில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு 200 பங்கேற்பாளர்களும் வெளிப்புறத்தில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு 1000 பங்கேற்பாளர்களும் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் ஒரு இடத்திற்கும் மற்றொரு இடத்திற்கும் இடையில் ஒரு மீட்டர் தூரமும், இருக்கைகள் ஒதுக்கீடும் செய்யப்பட வேண்டும். பாதுகாப்பு தூரத்தை கடைப்பிடிக்க முடியாத பட்சத்தில் நிகழ்வுகள் இடைநிறுத்தப்படும். பிராந்தியங்கள் மற்றும் தன்னாட்சி மாகாணங்கள், சுகாதார அமைச்சருடன் உடன்படிக்கையில், இடங்களின் அளவுகளை கருத்தில் கொண்டு வேறுபட்ட அதிகபட்ச பார்வையாளர்களின் எண்ணிக்கையை நிறுவ முடியும்.

விளையாட்டு மைதானங்கள்: விளையாட்டு போட்டிகளுக்கு, பொதுமக்களின் இருப்பு அனுமதிக்கப்படுகிறது. மைதானத்தின் மொத்த ஆக்கிரமிப்பில் அதிகபட்சமாக 15% சதவிகிதம் நிரப்பப்படலாம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிப்புறத்தில் 1000 பார்வையாளர்கள் மற்றும் உட்புறத்தில் 200 பார்வையாளர்களை விட அனுமதிக்கப்பட மாட்டாது. நபர்களுக்கு இடையிலான ஒரு மீட்டர் தூரம் மற்றும் நுழைவாயிலில் காய்ச்சலை அளவிடுவது உறுதி செய்யப்பட வேண்டும். பிராந்தியங்கள் மற்றும் தன்னாட்சி மாகாணங்கள், தங்கள் பிராந்தியங்களில் தொற்றுநோயியல் சூழ்நிலையின் முன்னேற்றம் தொடர்பாக, சுகாதார அமைச்சருடன் உடன்படிக்கையில், இடங்களின் அளவுகளைக் கருத்தில் கொண்டு வேறுபட்ட அதிகபட்ச பார்வையாளர்களை நிறுவலாம்.

விளையாட்டு: அனைத்து அமைச்சூர் போட்டிகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. தொழில்முறை கிளப்புகள் (club), இத்தாலிய தேசிய ஒலிம்பிக் குழு (CONI) மற்றும் இத்தாலிய பாராலிம்பிக் குழுவால் (CIP) அங்கீகரிக்கப்பட்ட கிளப்புகள் வழங்கும் விளையாட்டுக்கள் அந்தந்த தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள், அதனுடன் தொடர்புடைய விளையாட்டுத் துறைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைப்புகளால் வழங்கப்பட்ட நெறிமுறைகளுக்கு இணங்க, அனுமதிக்கப்படுகின்றன.

மேலும், அறிகுறிகள் இல்லாத கொரோனாவைரசு நோயாளிகள் 10 நாட்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி பின்னர் கொரோனாவைரசு பரிசோதனையை செய்து அதில் எதிர்மறை முடிவு வந்தால் மட்டுமே சமூகத்திற்கு திரும்பலாம் என சுகாதார அமைச்சு நிறுவியுள்ளது.

கொரோனாவைரசு நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பு இருந்தவர்கள், தொடர்பு ஏற்படுத்திய நாளிலிருந்து, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அல்லது 10 நாட்கள் தனிமைப்படுத்தலின் பின், 10வது நாள் பரிசோதனை செய்து எதிர்மறை முடிவு வர வேண்டும்.

கொரோனாவைரசு பரிசோதனையில் நோயாளிகளாக திகழும் நபர்கள், குறைந்தது ஒரு வாரத்திற்கு, அறிகுறி இல்லாத பட்சத்தில், அறிகுறிகள் தோன்றி 21வது நாள் தனிமைப்படுத்தலை நிறுத்த முடியும். சம்பந்தப்பட்ட நபர்களின் நோயெதிர்ப்பு நிலையை கருத்தில் கொண்டு, மருத்துவ வல்லுநர்கள் மற்றும் நுண்ணுயிரியலாளர்கள் ஆகியோருடன் உடன்படிக்கையில் இந்த அளவுகோலை சுகாதார அதிகாரிகள் மாற்றியமைக்கலாம்.

இவ் ஆணையில் அடங்கியுள்ள பாதுகாப்பு நெறிமுறைகள் அனைத்தும் இன்றிலிருந்து 30 நாட்களுக்கு, அதாவது எதிர்வரும் 13/11/2020 வரை செல்லுப்படியாகும்.

நோய்த்தொற்று குறியீட்டின் அடிப்படையில் கருதக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகள்

உங்கள் கவனத்திற்கு