இலங்கையின் கடைசித் தமிழ் மன்னன்- வரலாறு சொல்லும் பாடம் – பாகம் 5

அவர்களது வீறான ஆட்சியில் கண்டி அரசைக்கைப்பற்றப் பலதடவை ஒல்லாந்தராலும், ஆங்கிலேயராலும் முயற்சிகள் மேற்க்கொள்ளப்பட்டாலும் அவர்கள் கேவலமான தோல்விகளையே எதிர்கொண்டனர். எனினும், அந்தத் தமிழ் அரசர்களது அரண்மனைக்குள்ளேயே பௌத்த சிங்கள வெறி நுழையத் தொடங்கியதானது, இலங்கை வரலாற்றில் துயர் மிகுந்த வரிகளாகும். தனது இனத்திலிருந்தே  தனக்குரிய மனைவியரை மன்னன் தேடியதும், சிங்களப் பௌத்த அரசின் மன்னனாக ஒரு தமிழன் எப்படி இருக்க முடியும் என்ற சிங்களப் பெருங்குடிச் சிந்தனையும் கண்டி அரசின் மீளமுடியாத சறுக்கலுக்குக் காரணங்களாயின. முதல் அமைச்சர் பிலிமத்தலாவ முதலிலே சூழ்ச்சி செய்தான். எனினும், தமிழ் மன்னன் கண்ணுச்சாமி என்ற சிறீவிக்கிரமராச்சிங்கன்  சீறி வந்த ஆங்கிலப்படையை சிதறடித்தான். பிறகு, எகலப்பொல சூழ்ச்சி செய்தான். சிங்கள இனவெறியின் தூண்டுதலோடு சிங்கள அமைச்சர்கள், போர்வீர்ர்களின்  கயமை நிறைந்த காட்டிக்கொடுப்போடு  தமிழ் மன்னன் வீழ்த்தப்பட்டான். கண்டியரசும் ஆங்கிலேயராற் கையகப்படுத்தப்பட்டது. சிங்கள பௌத்தம் காக்கப்படும் என்ற வாக்குறுதியை ஆங்கிலேயரிடமிருந்து பெற்றுக்கொள்வதில் மட்டும், “காட்டிக்கொடுத்த” சிங்களவர் வெற்றி கொண்ட போதும், காலப்போக்கில் ஆங்கிலேயர் அவர்களைப் பதவிப் பொறுப்புகளிலிருந்து இறக்கியபோதுதான் விழிக்கத்தொடங்கினர்.

கடைசியாகக் கண்டியரசை ஆண்ட தஞ்சை புதுக்கோட்டை பூலாம்பட்டியைச் சேர்ந்த தமிழ் மன்னன் கண்ணுச்சாமி என்ற சிறீவிக்கிரமராச்சிங்கன் ஆங்கிலேயரால் தமிழ் நாட்டின் வேலூருக்குக் கொண்டு சென்று சிறை வைக்கப்பட்டு, 1832 இல், அங்கு இயற்க்கைச் சாவடைந்தான். பெரும் மதிப்புடனும் அங்கு அவனுக்காக நாட்டப்பட்ட நினைவுக்கல்லும், முத்து மண்டபமும், இலங்கை ஆட்சியில் தமிழரின், பெரும் பங்களிப்பை இன்றும் பேசி நிற்கின்றன. 1815 இல் கண்டி அரசு வீழ்ந்த பின்னரும் கூட, 1833 வரை இலங்கைத்தீவிலிருந்த 3 ஆட்சிப் பகுதிகளிலும் தனித்தனியாகவே ஆட்சி நடத்தப்பட்டு வந்தன. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

உங்கள் கவனத்திற்கு