மின்சாரம் மற்றும் எரிவாயு சலுகைகள்

மின்சாரம் மற்றும் எரிவாயு பயன்பாட்டு பற்றுச்சீட்டுகளில் தள்ளுபடிகள் மிகக் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளால் மின்சாரத்தால் இயங்கும் மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்துபவர்களுக்கும் உதவுவதற்காக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த தள்ளுபடியைப் பெறுவதற்கு, ஒரு குறிப்பிட்ட விண்ணப்பத்தை வசிக்கும் நகராட்சி அலுவலகத்திற்கு (Comune) அல்லது வரி உதவி மையத்திற்கு (CAF) சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை Arera இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்யலாம்.

மின்சாரம்
குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது: இரண்டு உறுப்பினர்கள் வரை 125 யூரோக்கள், நான்கு உறுப்பினர்கள் வரை 148 யூரோக்கள், நான்கு உறுப்பினர்களை விட 173 யூரோக்கள் வழங்கப்படும். ஆனால் இந்தத் தள்ளுபடியை ஒரே தீர்வில் வழங்காமல் 12 மாதங்களில் வழங்கப்பட்ட மின்சார பற்றுச்சீட்டுகளில் தவணை முறையில் செலுத்தப்படுகிறது. 12 மாதங்கள் முடிந்ததும், அடுத்த ஆண்டுக்கான மின்சார சலுகையைப் பெற மற்றொரு விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.
மேலும், மின்சார சேவை வழங்குநர் மாற்றப்பட்டால், புதிய பற்றுச்சீட்டுகளில் தானாகவே சலுகை அங்கீகரிக்கப்படும்.

இதற்கு விண்ணப்பிக்கக் கூடியவர்கள்:

  • ISEE 8.265 யூரோக்கள் வரை உள்ளவர்கள்;
  • ISEE 20.000 யூரோக்கள் வரை உள்ள பெரிய குடும்பங்கள் (4 பிள்ளைகளாவது இருந்தால்);
  • கடுமையான உடல்நலப் பிரச்சினைகளால் மின்சாரத்தால் இயங்கும் மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்துபவர்கள்.

எரிவாயு
எரிவாயு பயன்பாட்டு பற்றுச்சீட்டுகளில் தள்ளுபடிகள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்ட உதவி ஆகும்.
குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்களைப் பொறுத்தவரை இரண்டு பிரிவுகள் உள்ளன: 1 முதல் 4 நபர்கள் வரை மற்றும் 4க்கும் மேற்பட்டவர்கள்.

இரண்டாவது காரணி வசிக்கும் நகராட்சி ஆகும்: Bolzanoவில் வசிப்பவர்கள் Palermoவில் வசிப்பவர்களை விட அதிக சலுகையைப் பெறுவார்கள், ஏனெனில் அவர்களுக்கு அதிக வெப்ப தேவைகள் உள்ளன.
ARERA இணையதளத்தில் இச் சலுகையின் அளவைக் கணக்கிட முடியும்.

இதனைப் பெறுவதற்கான ISEE வரம்புகள் மின்சார சலுகைக்குச் சமம்:

  • ISEE 8.265 யூரோக்கள் வரை உள்ளவர்கள்;
  • ISEE 20.000 யூரோக்கள் வரை உள்ள பெரிய குடும்பங்கள் (3க்கும் மேற்பட்ட பிள்ளைகள் உள்ளவர்கள்).

ஒரு முக்கியமான தெளிவுபடுத்தல்: இயற்கை எரிவாயு அல்லது GPL எரிவாயு பயன்படுத்தினால் சமூக எரிவாயு சலுகையைக் கேட்க முடியாது. நகர எரிவாயு வலையமைப்போடு இணைக்கப்படுவது அவசியம். இதில் முக்கிய விடயம், நேரடி மற்றும் மறைமுக வாடிக்கையாளர்களுக்கு இடையிலான வேறுபாடு உள்ளது:

நேரடி வாடிக்கையாளர்: இவர் தனது வீட்டிற்கு இயற்கை எரிவாயு விநியோகத்தின் உரிமையாளராக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்;
மறைமுக வாடிக்கையாளர்: இவர் ஒரு கட்டிடத்தின் இயற்கை எரிவாயு அமைப்பைப் பயன்படுத்துபவர் மற்றும் விநியோகத்தின் உரிமையாளர் அல்ல. மையப்படுத்தப்பட்ட விநியோகத்தின் உரிமையாளர் மட்டுமே இதனைக் கோர முடியும்.

நேரடி வாடிக்கையாளருக்கு இச் சலுகை 12 மாதங்களுக்கு பிரிக்கப்படும். மறைமுக வாடிக்கையாளர்களுக்கு ஒரே தீர்வில் பணம் செலுத்தப்படும். அடையாள அட்டை மற்றும் codice fiscaleயுடன் தபால் அலுவலகத்திற்குச் சென்று பணத்தைப் பெற முடியும்.

எரிவாயு சலுகை 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும், அதன் பிறகு அடுத்த ஆண்டுக்கான சலுகையைக் கோர விண்ணப்பம் புதுப்பிக்கப்பட வேண்டும்.

உங்கள் கவனத்திற்கு