முகக்கவசம் அணிவது COVID பரவுவதை தடுக்கும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

வைரசு பரவுவதைக் கட்டுப்படுத்த, இதுவரை பரிந்துரைத்தபடி, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், அனைவரும் பொது இடங்களில் அணிவது நல்லது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

முகக்கவசங்கள் “தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவரிடமிருந்து வரக்கூடிய நீர்த்துளிகள்” மற்றவர்களுக்கு பரவக்கூடிய ஆபத்தை தடுக்கக்கூடியனவாக இருக்கின்றன என்பதைக் காட்டும் புதிய ஆதாரங்களைக் கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு விளக்குகிறது .
இத்தாலி உட்பட பல நாடுகள் ஏற்கனவே பொது இடங்களில் முகக்கவசங்களின் பயன்பாட்டை கட்டாயமாக்கிய பின்னர் அவற்றை அணிய பரிந்துரைக்கப்படுகிறது.

புதிய வழிகாட்டுதல்கள்: அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், ஏனைய நோய்கள் மூலம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் அறுவை சிகிச்சை முகக்கவசங்களைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களுக்கு, WHO இன் அறிவுரையின்படி, பொதுவான மூன்று அடுக்கு துணி முகக்கவசங்கள் போதுமானவை.
வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய முகக்கவசங்கள் மற்றும் சிறிய நிறுவனங்கள் கூட அவற்றை தொடர்ச்சியாக தயாரிக்க ஆரம்பித்து, வேலைகளை முன்னெடுத்துக்கொள்ளலாம் என்று உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்ட ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து, கடைகள், பணியிடங்கள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற எப்போதும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க சாத்தியமில்லாத இடங்களில் ஐ.நா. நிறுவனம் இப்போது முகக்கவசங்களின் பயன்பாட்டை பரிந்துரைக்கிறது.

மேலும், வைரசிலிருந்து தங்களைக் காப்பாற்ற முகக்கவசங்கள் மட்டும் போதாது, மாறாக அவை தொற்றுநோயைக் குறைக்க எடுக்க வேண்டிய பல நடவடிக்கைகளில் ஒன்றாகும், அதாவது உங்கள் கைகளை அடிக்கடி கழுவுதல் மற்றும் உடல் ரீதியான இடைவெளியை கடைபிடித்தல் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

உங்கள் கவனத்திற்கு