யாழ் பொது நூலகம் எரிப்பு: அடையாள அழிப்பின் உச்சம்!

தமிழீழத்தின் மிகவும் பொக்கிசமான கட்டிடக்கலை மற்றும் தமிழ் கலாச்சாரம், வரலாறு மற்றும் மொழி ஆகியவற்றின் மிக மதிப்புமிக்க ஆவணங்கள் உடைமைகளைக் கொண்டிருந்த யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்டு இன்றுடன் 39 ஆண்டுகள் ஆகின்றன. தமிழர்களின் பாரம்பரியம் கலாச்சாரம் சிங்கள இனவாதத்தால் திட்டமிட்டு தீக்கிரையாக்கப்பட்ட நாளின்று.

தென்னாசியாவிலேயே மூன்றாவது பெரிய நூலகமாக சிறந்து விளங்கிய இந் நூலகம், ஈழத்தமிழர்களின் வரலாறு, பண்பாடு, பாரம்பரியமிக்க மருத்துவக் குறிப்புகள், ஓலைச்சுவடிகள் போன்ற 97 ஆயிரத்திற்கும் மேலான விலை மதிக்க முடியாத பொக்கிச நூல்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டன.

வடக்கில் நடைபெற்றுக் கொண்டிருந்த அன்றைய அரசியல் பிரச்சினைகளை தன்பக்கம் சாதகமாக்கிக்கொண்ட சிங்கள அரசாங்கம் சில சிங்கள காவல்துறையினரை தெற்கிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்து தமிழர் வரலாற்றின் அடையாளாச் சின்னமாக விளங்கிய யாழ் பொது நூலகம் 31 மே 1981 நள்ளிரவு 10 மணியளவில் தீ மூட்டப்பட்டது.

சிங்கள இனவெறியர்களால் திட்டமிட்டு கட்டவிழ்க்கப்பட்ட இந்த கொடிய வன்செயல் தமிழர்களின் அடையாளங்கள், கலாச்சார அழிப்பாக மட்டுமல்லாமல் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையின் இன்னொரு வடிவமாகவும் அமைகிறது.

இன்றுவரை ஈழத்தமிழர்களின் வரலாற்றிலிருந்து அளிக்கப்படயிலாத ஒரு கரிநாளாக, துக்கநாளாக இந்த நாள் நினைவுகூரப்படுகிறது.

உங்கள் கவனத்திற்கு