மீட்பு நிதித் (recovery fund) தொகையை வெளியிட்டுள்ளது ஐரோப்பிய ஆணையம்

நேற்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உறுப்பு நாடுகளின் அமர்வு Bruxelle இல் நடைபெற்றது. அதில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Von der Leyen ஐரோப்பிய ஒன்றிய வரவுசெலவுத் திட்டத்தை(bilancio) புதிய மீட்பு நிதியத்தின் (Ricovery Fund) மூலம் வலுப்படுத்தும் ஐரோப்பிய ஆணையத்தின் திட்டத்தினை முன்மொழிந்துள்ளார்.

மீட்பு நிதி (Ricovery Fund) 750 பில்லியன் யூரோக்கள் ஆகும். இது ஐரோப்பிய ஆணையத்தால் மே 27 புதன்கிழமை முன்மொழியப்பட்டது. இப்போது இருபத்தேழு உறுப்பு நாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்த நிதித் தொகையில் 500 பில்லியன் மானிய வடிவிலும் மேலும் 250 பில்லியன் கடன் அடிப்படையிலும் விநியோகிக்கப்படுகிறது என்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் அறிவித்துள்ளார். இது ஐரோப்பிய ஒருங்கிணைப்பில் ஒரு வரலாற்று படியாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலிக்கு 91 பில்லியன் யூரோ மானியங்கள்

இது “முன்னோடியில்லாத நெருக்கடியை எதிர்கொள்ள ஒரு ஐரோப்பிய திருப்புமுனை” என்று பொருளாதார விவகார ஆணையர் Gentiloni தனது Twitterஇல் பதிவிட்டுள்ளார். இன்னும் உறுதிப்படுத்தப்பட வேண்டிய தொகைகளின் அட்டவணையின்படி, இத்தாலி 82 பில்லியன் யூரோக்கள் மானியங்களையும் 91 பில்லியன் கடன்களையும் பெறக்கூடும். மேலும், தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்ட மற்றொரு நாடு, எசுப்பானியா 77 பில்லியன் மானியங்களையும், 63 பில்லியன் கடன்களையும் பெறும் என ஊகிக்கப்படுகிறது.

நிதி விநியோக அளவுக்கூறுகள் இருபத்தேழு உறுப்பு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதாக இருக்கும். எனவே பணத்தின் ஒரு பகுதி இந்த ஆண்டு வழங்கப்படுகிறது. Bruxelle 2014-2020 வரவுசெலவுத் திட்டத்தில் திருத்தம் செய்து வரும் மாதங்களில் மொத்தம் 11.5 பில்லியன் யூரோக்களுக்கு நிதி உத்தரவாதம் அளிக்கும்.

நீண்ட காலவகாசத்துடன் நிதியளிக்கப்படுகிறது

இந்த புதுமையான மீட்பு நிதி, ஐரோப்பிய ஆணையத்தின் நிபந்தனைகளுக்குட்பட்டு நிதியளிக்கப்படும். ஒப்பந்தங்கள் வெவ்வேறு காலவகாசங்களைக் கொண்டிருக்கும், ஆனால் 2028 முதல் 2058 க்குள் அவற்றை திருப்பிச் செலுத்துவதே பொறுப்பாகும்.

வரலாற்று திருப்புமுனை

சொந்த வளங்களின் அதிகரிப்புடன் (digital வரி மற்றும் கரிம வரி போன்றவை ) கடனை திருப்பிச் செலுத்த ஐரோப்பிய ஆணையம் இருபத்தேழு நாடுகளுக்கும் முன்மொழிகிறது.
இதுவரை, ஐரோப்பிய ஆணையம் குறிப்பிட்ட குறிக்கோள்களுக்கு மிகக் குறைந்த அளவிலே கடனை வழங்கியுள்ளது (யூரோ அல்லாத பகுதி நாடுகளின் கொடுப்பனவுகளின் இருப்புக்கு உதவ முனைவதால்). இந்த திட்டத்தின் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்பார்ப்புக்கள் மாறுகின்றன. குறிப்பிடத்தக்க நிதி அதிகாரங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய இரண்டு நிதி நிறுவனங்களின் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

நிதியின் மிக முக்கிய அம்சங்கள்

மீட்பு நிதி மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்டது: உறுப்பு நாடுகளை ஆதரிப்பதற்கும், பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கும், இருக்கும் திட்டங்களை வலுப்படுத்துவதற்கும் அளிக்கப்படுகிறது.

நிதியத்தின் செயல்பாட்டைப் பொறுத்தவரை, பொருளாதார நிலைமையை மீண்டும் தொடங்குவதற்கு மட்டுமல்லாமல், பொருளாதாரத்தை நவீனமயமாக்க இந்த நிதி உதவ வேண்டும் என்று ஆணையம் முன்மொழிகிறது. எனவே, digital மற்றும் சுற்றுச்சூழலுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் Valdis Dombrovskis விளக்கமளித்தபடி, ஒவ்வொரு நாடும் அதன் சொந்த தேசிய திட்டத்தை முன்வைக்கவேண்டும். புதிய நிதி திட்டம் இருபத்தேழு நாடுகளாலும் பேச்சுவார்த்தை நடத்தி, மதிப்பீடு செய்யப்பட்டு ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அத்துடன், ஒரு ஐரோப்பிய உச்சி மாநாடு ஏற்கனவே ஜூன் 18-19 இல் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுள்ளது.