ஜூன் 3 முதல் பிராந்திய நகர்வுகள். சில வட பிராந்திய எல்லைகள் மூடப்பட்டலாம்.

ஜூன் 3 ஆம் திகதி முதல் மாநில அளவிலான நகர்வுகள் மேற்கொள்ளப்படலாம் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது. இதையொட்டி மத்திய-தெற்கு பிராந்தியங்களின் ஆளுநர்கள் முக்கியமாக Sardegna மற்றும் Sicilia பிராந்தியங்கள் வடக்கு பகுதியிலிருந்து வரும் நகர்வுகளைத் தடை செய்வதாக அச்சுறுத்தி வருகிறது. « புதிதாக தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைகிறது, வெள்ளிக்கிழமை கண்காணிப்பு தரவு நாம் எதிர்பார்ப்பது போல் நன்றாக இருந்தால், அனைவருக்கும் நல்லதொரு தீர்வைக் காண்போம் »  என்று சுகாதார அமைச்சிலிருந்து விளக்குகிறார்கள். மேலும் இன்னும் சில “சிக்கலான” புள்ளிகள் இருந்தால், அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு சில பிராந்தியங்களின் எல்லைகளைத் திறப்பதை தாமதப்படுத்த நாங்கள் முடிவு செய்யலாம், கூடுதலாக Lombardia, Piemonte மற்றும் Emilia Romagna. இதன் மூலம் கோடையில் சுதந்திரமான நகர்வுகளை வழங்க முடியும்.

கண்காணிப்பு
சுகாதார அமைச்சின் கண்காணிப்பின் முடிவு வெள்ளிக்கிழமை காலை வந்து சேரும். இது ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் கொரோனாவைரசு தொற்றுநோயின் ஆபத்து அளவை நிர்ணயிப்பதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இது நோயுற்றவர்கள், குணப்படுத்தப்பட்டவர்கள், இறந்தவர்கள், ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக மருத்துவ கட்டமைப்புகளின் செயல்பாடு ஆகியவற்றைக் கணக்கிடுகிறது.

இதன் முடிவின் அடிப்படையில், ஜூன் 3 முதல் இத்தாலி முழுவதும் தடைகளற்ற நகர்வுகளை அனுமதிக்கும் ஆணையை அமல்படுத்த வேண்டுமா அல்லது சில வரம்புகளை நிர்ணயிக்க வேண்டுமா என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும். மேலும், இது ஆளுநர்களுடனான உடன்பாட்டில் மேற்கொள்ள வேண்டியிருக்கும், மற்றும் அவர்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை அளிக்கிறது.

தெற்கு மாநிலங்களின் அச்சம்
தெற்கில் கோடைகாலத்தைப் பார்க்கும்போது – Sardegna, Sicilia, Puglia மற்றும் Campania ஆகியவையும் சுற்றுலாப் பயணிகளுக்கு முழு சுதந்திரமான நகர்வைக் குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளன. அதிக எண்ணிக்கையிலான நோயுற்ற மக்களைக் கொண்ட வடக்கு பகுதிகளிலிருந்து மக்கள் வருகை குறித்த அச்சங்கள் உள்ளன.

« Piemonte, Lombardia, Veneto மற்றும் Emilia Romagna விலிருந்து புறப்படுபவர்களைக் கட்டுப்படுத்தாமல் தொற்றுக்குள்ளானவர், அறிகுறியற்றவர்களை வேறுபடுத்துவதே இதன் குறிக்கோள். அதனால்தான் எல்லைகளை மூடுவதற்கான கட்டளைகளைப் பற்றி நாங்கள் முன்வைக்கிறோம், துல்லியமாக இந்த அணுகுமுறையை தவிர்ப்பதற்காக, புதிய தொற்றுநோய்கள் உள்ள பிராந்தியங்களைத் திறப்பதை மட்டுப்படுத்த அரசாங்கம் யோசிக்கிறது » என்று Sicilia ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இப்போது வரை தொற்றுப் பரவிக்கொண்டு இருக்கிறது, மற்றும் தெற்கு பிராந்திய ஆளுநர்களால் எழுப்பப்பட்டிருக்கும் சர்ச்சைகள் குறித்து வாராந்திர பிராந்திய-அரசாங்க கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். இனிவரும் சந்திப்பில் சுதந்திரமான நகர்வுகள் பற்றி இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கவனத்திற்கு