முறையற்ற வேலை ஒப்பந்தங்கள், வதிவிட அனுமதிகளை முறைப்படுத்த புதிய சட்டம்

மீன்பிடி, வேளாண்மைத் தொழிலாளர்கள், வீட்டுத் தொழிலாளர்கள் (colf) மற்றும் முதியோர்கள் பராமரிப்பாளர்கள் (badanti), ஒப்பந்தமற்ற வேலையுறவைக் கொண்ட இத்தாலிய மற்றும் வெளிநாட்டு குடிமக்கள் மற்றும் காலாவதியான குடியிருப்பு அனுமதிகளுடன் (permesso di soggiorno) இருப்பவர்களை இந்த வேலை ஒப்பந்தம் முறைப்படுத்துதல் சென்றடையும்.

முறையற்ற வேலை ஒப்பந்தத்தில் இருந்து வெளிவருவதற்கு தொழிலாளி மற்றும் முதலாளி இருவரிடமிருந்தும் கோரிக்கை அனுப்பப்படலாம்.

யார் இதனைக் கோரலாம்

  • முதலாளி, ஒரு இத்தாலிய அல்லது வெளிநாட்டு குடிமகனுடனான தற்போதைய முறையற்ற வேலை ஒப்பந்தத்தை முறைப்படுத்துமாறு கோரிக்கை கேட்க முடியும். மேலும், அவர் ஒவ்வொரு முறைப்படுத்தப்பட்ட தொழிலாளிக்கும் 500 யூரோக்களை செலுத்த வேண்டும். ஒரு வெளிநாட்டவர் என்றால், ஏற்கனவே இந்த ஆண்டு மார்ச் 8 ஆம் திகதிக்கு முன்னர், தனது குடியிருப்பு அனுமதி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும், மேலும் அந்த திகதிக்குப் பிறகு இத்தாலியில் தங்கியிருக்க வேண்டும்.
  • தொழிலாளி நேரடியாக விண்ணப்பிக்கலாம். அவர் கடந்த ஆண்டு அக்டோபர் 31ல் இருந்து காலாவதியான குடியிருப்பு அனுமதி வைத்திருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட மூன்று துறைகளில் ஒன்றில் அக்டோபர் 31 க்கு முன்பு நீங்கள் பணியாற்றினீர்கள் என்பதை நிரூபிப்பதன் மூலம் ஆறு மாத தற்காலிக குடியிருப்பு அனுமதிக்கு (permesso di soggiorno temporaneo) விண்ணப்பிக்கலாம். மேலும், 160 யூரோக்களையும் செலுத்த வேண்டும்.
  • புகலிடம் கோருவோருக்கும் (richiedenti asilo) இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் புகலிடக் கோரிக்கை விண்ணப்பித்து 60 நாட்களுக்குப் பிறகு, பணி அனுமதி (permesso di lavoro) பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம். எனவே, அவர்கள் பணிபுரிந்ததை நிரூபிக்க வேண்டும்.

நாட்டை விட்டு வெளியேற உத்தரவைப் பெற்ற அல்லது விபச்சாரம், போதைப்பொருள் கையாளுதல் போன்ற கடுமையான குற்ற வழக்குகளைக் கொண்டுள்ள வெளிநாட்டவர் இந்த கோரிக்கையிலிருந்து விலக்கப்படுகிறார்கள்.

யாரிடம் கோரிக்கையை அனுப்புவது

மூன்று நிறுவனங்கள் விண்ணப்பங்களை நிர்வகிக்கும்.

  1. பணி ஒப்பந்தம் இல்லாமல் சட்டவிரோதமாக பணிபுரிபவராயின் (lavoro nero) நீங்கள் INPS ஐத் தொடர்பு கொள்ள வேண்டும்.
  2. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் அல்லாத ஊழியர்களை முறைப்படுத்த விரும்பும் முதலாளி அதற்கு பதிலாக உள்துறை அமைச்சகத்தின் குடிவரவு அலுவலகத்திற்கு (sportello immigrazione) செல்ல வேண்டும்.
  3. இறுதியாக, ஒரு தற்காலிக குடியிருப்பு அனுமதி (permesso di soggiorno temporaneo) கேட்க விரும்பும் வெளிநாட்டவர் நேரடியாக காவல்துறை தலைமையகத்திற்கு (Questura) செல்ல வேண்டும்.

காலவரை

1 ஜூன் முதல் 15 ஜூலை வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். விதிக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் பட்சத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படும். இருப்பினும், சில விவரங்கள் இன்னும் வரையறுக்கப்பட வேண்டி இருப்பதால், அடுத்து வரவிருக்கும் ஆணையில் முதலாளியின் வருமான வரம்புகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் முறைப்படுத்த வேண்டிய வேலை ஒப்பந்தத்தை நிரூபிக்க தேவையான ஆவணங்களை நிறுவுதல் போன்ற வரையறைகளைக் கொண்டிருக்கும் .

உங்கள் கவனத்திற்கு