திங்கள் முதல் இத்தாலியில் மாறுவது என்ன?

கொரோனாவைரசு தொற்றுநோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க மே 18 முதல் செய்யக்கூடியவை அனைத்தும் கீழே காணலாம்.

பொதுவாக மக்கள் 1 மீட்டர் சமூக இடைவெளியையும், கடற்கரைகள், bar, உணவகங்கள், சிகையலங்கார நிலையங்கள் போன்ற இடங்களில் மக்களுக்கு இடையே 1 மீட்டர் இடைவெளியையும் பேண வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. மூடிய இடங்களில் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாக இருக்கும். கடைகளுக்குள் நுழையும் போதும், சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாதபோதும், ​​வெளியிலும் கூட முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். மக்கள் கூட்டங்கள் மீதான தடை நீடிக்கிறது.

சுயஅறிவிப்புப் படிவம்

வசிக்கும் மாநிலத்திற்குள் நகர்வுகளை மேற்கொள்ள இப் படிவத்தைப் பயன்படுத்தவேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்ல படிவத்தைப் பயன்படுத்த வேண்டும். வசிக்கும் மாநிலத்தை விட்டு வெளியே செல்ல மூன்று காரணங்கள் உள்ளன: “வேலை, சுகாதாரம், அவசிய மற்றும் அவசரத் தேவை” இந்த மூன்று நகர்வுகளின் போது நபர்களால் அறிவிக்கப்பட்ட காரணிகள் மீது சோதனை மேற்கொள்ளப்படலாம்.

வேறு பிராந்தியங்களுக்கு இடையிலான நகர்வுகள்

ஜூன் 3 ஆம் திகதி முதல் பிராந்தியங்களுக்கு இடையிலான நகர்வுகளை மேற்கொள்ளலாம். தொற்றுநோயியல் விகிதாசாரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பிராந்திய ஆளுநரும் தனிப்பட்ட தடைகளை விதிக்கலாம். மேலும், ஜூன் 3 முதல், ஐரோப்பிய நாடுகளுக்கான நகர்வுகளும் அனுமதிக்கப்படுகின்றன. இவற்றிற்கு கட்டாய தனிமைப்படுத்தல் தேவையில்லை.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள்

உறவினர்களைத் தவிர, நண்பர்களையும் சந்திக்கலாம். ஒரே நேரத்தில் பல நபர்களைச் சந்திக்கலாம், ஆனால் கூட்டம் கூடுவதற்கான தடை நீடிக்கிறது மற்றும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சமூக இடைவெளியை கருத்தில் கொள்ள வேண்டும்.

வேறு வீடுகள்

நீங்கள் வசிக்கும் மாநிலத்திற்குள் உங்களுக்குச் சொந்தமான வேறு வீடுகளுக்குச் சென்று தங்கலாம். அவசிய மற்றும் அவசரத் தேவை காரணங்களுக்கு, வேறு மாநிலத்திலுள்ள வேறு வீடுகளுக்கு செல்ல முடியும். ஆனால், சுயஅறிவிப்புப் படிவம் வைத்திருக்க வேண்டும், அதற்கான காரணத்தையும் நிரூபிக்க வேண்டும்.

Bar மற்றும் உணவகங்கள்

Bar, உணவகங்களளின் சதுர அளவுக்கு ஏற்ப வாடிக்கையாளர்கள் உள்நுழைய முடியும், எனவே வாடிக்கையாளர்கள் முகக்கவசங்களுடன் வரிசையில் நிற்க வேண்டும். ஒரே நேரத்தில் எத்தனை பேர் அறைக்குள் நுழைய முடியும் என்பதை நிறுவ, அறை மேற்பரப்பை 4 ஆல் வகுக்க வேண்டும். உணவகத்தில், அடிப்படை விதி என்பது ஒரு மேசைக்கும் மற்றொன்றுக்கும் இடையில் இரண்டு மீட்டர் தூரமும், ஒரு பணியாளருக்கும் மற்றொருவருக்கும் இடையில், “நீர்த்துளிகள் பரவுவதைத் தவிர்க்கக்கூடிய தூரம்” இருக்க வேண்டும். இனி buffet சேவை, காகித உணவு அட்டவணைகள் என்பன இருக்காது. பணியாளர்கள் கையுறைகள் மற்றும் முகக்கவசங்கள் அணிய வேண்டும்.

கடைகள்

அனைத்து நடவடிக்கைகளிலும் மற்றும் சேவையின் போதும், ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது இடத்தின் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரம் குறித்த உத்தரவாதம்;போதுமான இயற்கை காற்றோட்டம் மற்றும் காற்று பரிமாற்றத்திற்கான உத்தரவாதம் ஆகியவை மதிக்கப்பட வேண்டிய விதிகள் ஆகும் .
விசைப்பலகைகள், தொடுதிரைகள் மற்றும் கட்டண பகுதியில் கைகளுக்கான கிருமிநாசினிகள் வைத்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் முகக்கவசங்களை பயன்படுத்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கையுறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் கட்டுப்படுத்தப்பட்ட நுழைவுகளுக்காக கடைகளின் திறப்பு நேரங்களை நீட்டிக்க முடியும். நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் பல்வகைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் சிறிய கடைகளில் ஒரே நேரத்தில் உள்நுழையலாம். துணிக்கடைகளில் ஆடை மாற்றும் அறைகளைப் பயன்படுத்துவதற்கு முன்னெச்சரிக்கைகள் இருக்கும்.

சிகையலங்கார நிலையங்கள்

சேவைகள் முன்பதிவு மூலமாக நடைபெறவேண்டும். இது online மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ மேற்கொள்ளலாம். இவை ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளிலும் திறந்திருக்கலாம். பணிநிலையங்கள் மற்றும் பயன்படுத்தும் கருவிகளை சுத்தப்படுத்தவும், வாடிக்கையாளர்களின் நெரிசல்களைத் தவிர்த்து சிறப்பாக சேவை நேரத்தை நிர்வகிக்க இது உதவுகிறது. இரண்டு மீட்டர் இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம். உடல் வெப்பநிலையைக் சோதிக்க அனுமதியுண்டு. முடி கழுவுதல் கட்டாயமாகும்.

சிற்றுந்து (auto)

நீங்கள் ஒன்றாக வாழும் நபருடன் பயணம் செய்யாவிட்டால், சிற்றுந்தில் 1 மீட்டர் இடைவெளியை வைத்திருக்க வேண்டும். பயணிகள் ஓட்டுநருக்கு எதிரே உள்ள பின்புற இருக்கையில் அமர வேண்டும்.
Taxi யில் பின் இருக்கையில் இரண்டு நபர்கள் செல்லலாம். ஆனால் முகக்கவசங்கள் அணிய வேண்டிய கடமை உள்ளது. இது ஓட்டுநருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.

கோவில்கள்

மத சேவைகளில் பங்கேற்கலாம். ஆனால் அதாவது, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களே உள்நுழையலாம். மேலும் கட்டாயமாக முகக்கவசங்கள், சமூக இடைவெளி, இடங்களை சுத்தம் செய்தல் அவசியமாகும். மேலும், 37.5 பாகைக்கு சமமான அல்லது அதிக உடல் வெப்பநிலை உள்ளவர்களுக்கு நுழைவு தடை செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கவனத்திற்கு