ஜூன் 1 முதல் பிற மாநிலங்களுக்கு இடையேயான நகர்வுகள்

மாநில விவகார அமைச்சர் Francesco Boccia

நேற்று மாநில விவகார அமைச்சர் Boccia மற்றும் மாநில ஆளுநர்களுக்கிடையே மாநில அளவிலான நகர்வுகள் சார்ந்த கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் அமைச்சர் Boccia “மாநிலங்களுக்கிடையிலான நகர்வுகள் சார்ந்த மதிப்பீட்டைத் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரம் எடுத்துக்கொள்வோம்” என்று கூறினார், நிச்சயமாக மே 18 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படாது, ஒருவேளை மே 25 ஆக இருக்கலாம் அல்லது கூடுதலாக ஜூன் 1 அன்று இருக்கும் என தெரிவித்தார்.

மேலும், ” இந்த நகர்வுகள் ஒவ்வொரு மாநிலத்தினதும் கண்காணிப்புத் தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். வியாழக்கிழமையிலிருந்து கட்டம் 2 இன் தரவுகள் பொதுவாக வெளியிடப்படவுள்ளது.
இரு அண்டைய மாநிலங்கள் குறைந்த அளவிலான ஆபத்தினை கொண்டிருக்கும் பட்சத்தில் அம்மாநிலங்களுக்கிடையே நகர்வுகளை அனுமதிப்பது சாத்தியமாகும். ஆனால், ஒரு மாநிலம் கூடியளவு மற்றது குறைந்தளவு ஆபத்தை கொண்டிருந்தால் நகர்வுகள் துண்டிக்கப்படும். இந்த சிக்கலான இயங்கமைப்பு இன்னும் வரைமுறைப் படுத்தவில்லை, ஆனால் இணைந்து முடிவுகள் எடுக்கப்படும்
” என்று அவர் கூறியுள்ளார்.

எனவே, நேற்று எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் சுருக்கம் என்னவென்றால், மே 18 முதல் ஒவ்வொரு பிராந்தியமும் அனைத்தையும் மீண்டும் திறப்பது சார்ந்து கணிசமாக தனிப்பட்ட விதிமுறைகளுடன் இயங்கும். ஆனால் மக்கள் கூட்டங்களாலும் புதிய தொற்றுக்களாலும், நோய்த்தொற்றுகள் குறித்த தரவு உயர்ந்தால், பொதுவான கட்டுப்பாடுகள் தூண்டப்பட்டு பொறுப்புகளை அம் மாநில ஆளுநர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

மேலும், bar, உணவகங்கள், கடைகள், சிகையலங்கார நிலையங்கள் மீண்டும் திறக்கப்படுவது குறித்த வழிகாட்டுதல்கள் “கிட்டத்தட்ட அனைத்தும் தயாராக உள்ளன” இவை வார இறுதிக்கு முன்பே அறிவிக்கப்படும் என்பதையும் Boccia உறுதி செய்துள்ளார்.

உங்கள் கவனத்திற்கு