Piemonte மாநிலத்திலும் முக கவசம் அணிய வேண்டும்.

Piemonte மாநில ஆளுநர் Alberto Cirio – ANSA/ ALESSANDRO DI MARCO

கொரோனா அவசரநிலையின் இரண்டாம் கட்டத்தில் மக்கள் பாதுகாப்பாக வெளியே நடமாடுவதற்காக முக கவசம் அணிவது அத்தியாவசியமானது. இதனால், இத்தாலியன் சில மாநிலங்கள் ஏற்கனவே மக்களுக்கு முக கவசங்கள் இலவசமாக கொடுத்துள்ளன. அந்த வகையில், தற்போது Piemonte யிலும் இன்னும் சில வாரங்களில் முக கவசம் விநியோகிக்கப்படும் என்று அந் மாநில ஆளுநர் Cirio தெரிவித்துள்ளார்.

மாநில மக்கள் அனைவருக்கும் தேவையான முக கவசங்கள் கிடைக்கப்பெற்றவுடன் அவை வழங்கப்படுவதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும், தேவைப்படுகின்ற 5 மில்லியன் முக கவசங்களை வாங்குவதற்காக கொரோனாவைரசு அவசரநிலைக்காக Piemonteயில் பெறப்பட்ட நிதியில் ஒரு பகுதி உபயோகிக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

அத்துடன், இந்த முக கவசங்கள் கழுவி மீண்டும் பயன்டுத்தக்கூடியவை. இவற்றை எவ்வாறு மக்களுக்கு வழங்கப்படவைப்பது என்று மாநில அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. Lombardia, Emilia Romagna மற்றும் Toscana மாநிலங்களில் ஏப்ரல் மாத தொடக்கத்திலே வழங்கப்பட்டுவிட்டன. Piemonte யில் மே 3 ஆம் திகதிக்குள் அனைவருக்கும் வழங்கப்பட்டு விடும்.

Poste italiane மற்றும் வேறு சில நிறுவனங்கள் ஊடாக விநியோகிக்கப்படும் சாத்தியங்கள் உள்ளன என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கவனத்திற்கு