இரண்டாம் கட்டம் : இத்தாலியின் மறு ஆரம்பம்.

இரண்டுக்கட்ட நடவடிக்கை: அடுத்த வாரத்திலிருந்து நிறுவனங்கள், மே 4 முதல் குடிமக்கள் மற்றும் கடைகள் திறக்கப்படும். மெதுவான மற்றும் படிப்படியான மீட்பு, தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பிரிவு. தொற்றுக்கு உள்ளாகிய நபர்களைக் கண்காணித்தல். பள்ளியை மீண்டும் திறக்க வேண்டாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வேலை செய்வதற்கும் கடைகளுக்குள் செல்வதற்கும் நேரகால சுற்றுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
பொதுமக்களுடன் தொடர்பு உள்ளவர்களுக்கு பாதுகாப்பு தூரம் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் கட்டாயமாகும். கொரோனாவைரசு அவசரகாலத்தின் இரண்டாம் கட்டம் மே 4 ஆம் திகதி ஆரம்பமாகும். கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது தினசரி பழக்கவழக்கங்கள் தீவிரமாக மாற வேண்டும். குடிமக்களும் புதிய விதிகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று அரசாங்கமும் விஞ்ஞானிகளும் உறுதியாக உள்ளனர்.

விஞ்ஞான-தொழில்நுட்பக் குழுவுடனான சந்திப்பின் போது, ​​பிரதமர் Giuseppe Conte “சுகாதாரப் பாதுகாப்பு முதலிடத்தில் உள்ளது, ஆனால் நாட்டின் இயந்திரங்கள் அதிக நேரம் மூடிய நிலையில் இருக்க முடியாது” என்று தெரிவித்தார்.

குடிமக்களின் உளவியல் நிலைமை, பொது ஒழுங்கு மற்றும் பொருளாதார மூடல்களின் தாக்கம் பற்றி கவலைப்பட்டாலும், நோய்ப்பரவுதலின் வளைவு தற்போது சமமான நிலையில் வந்திருக்கும் இத் தருணத்தில் அதிகமான கவனத்தைச் செலுத்த வேண்டும்.

எனவே, வெளியே நகர்வதற்கானத் தடைகளின் காலப்பகுதியை மேலும் நீடித்தாலும், அடுத்த வாரம் சில நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படுவதற்கு சாத்தியம் இருக்கின்றது என எதிர்வரும் நாட்களில் புதிய ஆணை மூலம் தெரிவிக்கப்படும்.


சுற்றுமுறையின் கடைப்பிடிப்பு

வணிகங்கள், நிறுவனங்கள், தொழில்முறை நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்றால் அலுவலகங்களுக்குள் நெரிசல்கள் உண்டாகுவதைத் தடுக்க வேண்டும். இதனால்தான் ஸ்மார்ட் வேலையை அதிகளவில் மேற்கொள்ள வேண்டும், அல்லது வேலையில் நேரகால சுற்றுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். நபர்களுக்கிடையிலான 1 மீட்டர் தூரம் இருக்க வேண்டிய பட்சத்தில் வேலை அமர்வுகளுக்கிடையில் இடைவெளி அகலமாக இருக்க வேண்டும். உணவுப்பொருட்கள், மருந்துகள் வாங்குவதற்கு பல்பொருள் அங்காடிகள் மற்றும் மருந்தகங்களுக்கு முன்னால் வரிசையில் நின்று தனித்தனியாக உள்ளே செல்ல வேண்டும். சிகையலங்கார நிபுணர், அழகு மையங்கள் மற்றும் நெருங்கிய தொடர்பு ஏற்படக்கூடிய அனைத்து இடங்களிலும், சந்திப்பை முதலில் பதிவு செய்து அந்த நேரத்திற்கு செல்ல வேண்டும். அறைக்குள் இரண்டு நபர்கள் மட்டுமே நிக்க வேண்டும்: தொழிலாளி மற்றும் வாடிக்கையாளர்.


கையுறை மற்றும் முகக்கவசங்கள்

பொதுமக்களுடன் தொடர்புகளைக் கொண்ட தொழிலாளர்கள் கையுறைகள் மற்றும் முகக்கவசங்களை அணிய வேண்டும். மக்களும் ஏனையவர்களுடன் இருக்கும் போதும் கடைகளுக்குச் செல்லும் போதும்
இச் சாதனங்களை வைத்திருக்க வேண்டும்.


பாடசாலைகள் திறக்கப்படாது

முதியோர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் போன்ற நபர்களின் நகர்வுகளை தடுக்கும் முகமாகவும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் செப்டம்பர் மாதம் வரை திறக்கப்படாது.


கடைகளின் பட்டியல்

புத்தகக் கடைகள் மற்றும் எழுதுபொருள் கடைகள் மெதுவாகத் திறக்கப்படும். Ateco குறியீடுகளுடன் ஒப்பிடும்போது தரவரிசை அடிப்படையில் விஞ்ஞானிகள் குறைந்த ஆபத்துள்ள உற்பத்தி நடவடிக்கைகளில் சற்று தளர்த்தியுள்ளனர். வேளாண்மை, கட்டிட வேலை, காசாளர்கள் குறைந்தளவில் ஆபத்திற்கு உள்ளாகின்ற பகுதி ஆகும். அதிக ஆபத்திற்கு உள்ளாகிறவர்கள் விடுதிகளின் பணியாளர்கள், பொது உணவகங்களின் ஊழியர்கள் மற்றும் சிகையலங்கார நிபுணர்கள் ஆவார்கள்.


கண்காணிப்பு

வைரசை இனம் காணுவதற்கான டிஜிட்டல் பயன்பாடு மேற்கொள்ளப்படுகின்றது.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனிப்பட்ட பயன்பாடுகளை மேற்கொள்வதை விட முழு ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஒரு முடிவாக அமைக்க வேண்டும். Bluetooth ஊடாக கடந்து வந்த கைத்தொலைபேசிகளின் குறியீடுகளைக் கண்டறிய முடியும். ஒரு நபர் நேர்மறையாக ஏற்பட்டால், நோயாளியின் அடையாளம் குறித்த தகவல்கள் இல்லாமல் மற்றவர்கள் புனரமைக்கப்பட முடியும். டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளும் கண்காணிப்பு முடிவடைந்து நோயாளிகளை தனிமைப்படுத்தப்பட வேண்டிய கட்டம் ஆரம்பமாகும்.


நம்பகமான சோதனைகள்

சுகாதார மந்திரி Roberto Speranza நோயுற்ற மற்றும் வீட்டு பராமரிப்புக்கான பிராந்திய உதவிகளுக்கான சுகாதார வலையமைப்பை வலுப்படுத்துவதற்காக செயல்படுகிறார், மேலும் இந்த டிஜிட்டல் பயன்பாடு நேர்மறையான நபர்களை அடையாளம் கண்டு மருத்துவர்களுடன் தொடர்பை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இவை அனைத்தும் நம்பகமான சோதனைகள் இல்லாமல் சாதிக்க இயலாது. இதனால், அமைச்சர் Francesco Boccia நம்பகமான சோதனைகள் எவை என்று விஞ்ஞானிகளை கேட்டு அனைத்து பிராந்தியங்களுக்கும் சோதனை விதிகளை ஒரே மாதிரியாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்துள்ளார்.

இரண்டாம் கட்டத்தில் மற்றொரு தொற்றுநோயின் அபாயத்தை விலக்க புதிய நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய பாதுகாப்பான இடங்கள் இருப்பது அவசியம்.

உங்கள் கவனத்திற்கு