கொரோனாவைரசு, தொற்றுதலின் வளைவின் முடிவுக்கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம்.

இத்தாலிய உயர் சுகாதார நிறுவனத்தின் தலைவர் Silvio Brusaferro

உயர் சுகாதார நிறுவனம்: “தரவுகள் உறுதிப்படுத்தப்பட்டால், இரண்டாவது கட்டத்திற்குள் செல்வத்தைச் சார்ந்து சிந்திக்கலாம்”

நோய்ப்பரவு வளைவு இறங்க தொடங்கியுள்ளது, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு வருகிறது. இந்த தரவுகள் உறுதிப்படுத்தப்பட்டால் இரண்டாவது கட்டத்தைச் சார்ந்து சிந்திக்க ஆரம்பிக்கலாம்” என்று இன்று நடைபெற்ற சிவில் பாதுகாப்பு துறையின் பத்திரிகை சந்திப்பில், இத்தாலிய உயர் சுகாதார நிறுவனத்தின் தலைவர் Silvio Brusaferro தெரிவித்துள்ளார்.
19 மார்ச்சில் இருந்து இன்று தான் அதி குறைந்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை காணப்பட்டுள்ளது ( 5 ஏப்ரல் – 525 நபர்கள் கடந்த 24 மணித்தியாளங்களில் உயிரிழந்துள்ளார்கள்).

“தொற்றுதலின் உச்சக் கட்டத்தை கடந்து வந்துள்ளோம். உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும், புதிதாக தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு போகிறது” என்று Brusaferro கூறியுள்ளார். மேலும் “வருகின்ற நாட்களில் இந்த போக்கை தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

சிவில் பாதுகாப்புத் துறையின் தலைவர் Angelo Borrelli வெளியிட்ட புள்ளிவிபரங்களில் அவசர சிகிச்சைக்குள் இருக்கும் நபர்களின் எண்ணிக்கையும் மற்றும் மருத்துவமனையில் உள்ள நபர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு வருகிறது.
இந்த நேர்மறையான தரவுகள் எங்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை எளிதாக்க கூடாது.

இத்தாலி பிரதமர் Giuseppe Conte வும் இதே கருத்தை முன்வைத்தார்: “இந்த தனிமைப்படுத்துதல் எப்பொழுது முடிவுக்கு வரும் என்பதை இன்னும் தெளிவாக கூறமுடியாது. வல்லுநர்களின் பரிந்துரைகளை அரசாங்கம் பின்தொடர்ந்து வருகிறது. மேற்குலகத்தில் இத்தாலி தான் முதலாவது நாடாக பாதிப்புக்கு உள்ளாகியது. நாங்கள் எடுத்த முடிவுகள் சரியானவை என்று உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தரவுகளும் நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.”

உங்கள் கவனத்திற்கு