COVID-19 காலத்தில் மன அழுத்தத்தை எப்படி கையாள்வது?

இந்த இக்கட்டான நேரத்தில் சோகம், மன அழுத்தம், குழப்பம் அல்லது பயம் ஏற்படுவது இயல்புதான். ஆனால் இவையே உங்களை முழுதாக ஆக்கிரமிக்க விடுவது உங்கள் உடல், மன மற்றும் குடும்ப நலத்திற்கு உகந்தது அல்ல. இவற்றுக்கு ஆளாகாமல் இருப்பதற்கு பல வழிகள் உண்டு. உலக சுகாதார அமைப்பினால் பரிந்துரைக்கப் பட்ட அறிவுறைகளில் சிலவற்றை இந்த கட்டுரையில் கொண்டு வந்துள்ளோம்.

  • முதலில் உங்கள் மனதை இலேசாக வைத்திருக்க நெருங்கிய நபர்களுடன் பேசுவது உங்களுக்கு உதவக்கூடும். எனவே, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மனம் விட்டு உரையாடுங்கள்.
  • வீட்டில் இருக்கும்போது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரியுங்கள்: ஆரோக்கியமான உணவு, தூக்கம், உடற்பயிற்சி,மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வழியாக உங்கள் அன்புக்குரியவர்களுடன் மற்றும் நண்பர்களுடன் தொடர்புகொள்ளுங்கள்.
  • புகைபிடிப்பது, மது அருந்துவது அல்லது போதை பயன்படுதுவது உடல் நலத்தை மிகவும் பாதிக்கும், ஆகையால் அவற்றை தவிருங்கள்.
  • நீங்கள் கவலையை அதிகமாக உணர்ந்தால், ஒரு சுகாதார நிபுணர் அல்லது ஆலோசகரிடம் பேசுங்கள்.
  • உங்களுக்கு வரும் ஆபத்தை தீர்மானிக்க உதவும் தகவல்களை சேகரியுங்கள், இதனால் நீங்கள் அறிவுபூர்வமான முன்னெச்சரிக்கைகளை எடுக்க முடியும். உதாரணத்திற்கு, உலக சுகாதார அமைப்பு (WHO) வலைத்தளம் அல்லது உங்கள் நாட்டில் உள்ள ஒரு அரச சுகாதார நிறுவன வலைத்தளம் போன்ற நம்பகமான அறிவியல் மூலத்தைக் கண்டறியுங்கள்.
  • நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் மன அமைதி கெடுக்கும் ஊடகங்களைப் பார்ப்பதற்கும் அல்லது கேட்பதற்கும் செலவழிக்கும் நேரத்தைக் குறைத்தால், உங்கள் கவலையையும் மன அழுத்தத்தையும் குறைக்க முடியும் .
  • இந்த அவசரகாலத்தின் போது உங்கள் உணர்ச்சிகளை நிர்வகிக்க கடந்த காலங்களில் நீங்கள் வாழ்க்கையின் துன்பங்களை எவ்வாறு எதிர்கொண்டீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது ஒரு நல்ல உந்துதலாக இருக்கக்கூடும்
  • இறுதியாக, தினமும் குறைந்த பட்சம் 20 நிமிடங்களாவது உங்களுக்கென நேரத்தை ஒதுக்குங்கள். அது முழுக்க முழுக்க உங்களுக்காகவே மட்டும் இருக்கவேண்டும். பிடித்ததைச் செய்யுங்கள்.

எனவே, எதிர்மறை எண்ணங்களை யோசிக்காமல் எப்போதும் நல்ல எண்ணங்களை உள்வாங்குங்கள். உங்களுடைய மனசு மற்றும் எண்ணங்களை ஆளுபவராய் நீங்கள் இருக்க முயற்சி செய்தால் கெட்டவற்றை நெருங்க விடாமல் அமைதியான மனநலத்தை அடையலாம்.

நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கொரோனா வைரசு பரவுதலால் இத்தாலியில் விதிக்கப்பட்ட அவசரக்கால சட்டங்கள் சம்மந்தமாக கேள்விகள் மற்றும் உதவிகள் பெறுவதற்கு எம்மை மின்னஞ்சல் அல்லது தொலைபேசி ஊடாக தொடர்புகொள்ளலாம்:

contact@tamilinfopoint.it

(10:00 – 13:00) – 0039 333 744 1711
(15:00 – 18:00) – 0039 327 755 0188 – 015779020
(18:00 – 21:00) – 0039 389 101 9911

உங்கள் கவனத்திற்கு