கொரோனாவைரசு: புதிய ஆணையின் உள்ளடக்கங்கள்

இத்தாலி பிரதமர் Giuseppe Conte

புதன் இரவு (ஏப்ரல் 1) இத்தாலி அரசாங்கத்தின் பிரதமரால் விதிக்கப்பட்ட புதிய ஆணையின் படி ஏப்ரல் 13 வரை பாடசாலைகள், அத்தியாவசியமில்லாதக் கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் இருக்க வேண்டும்.
திறப்பு அனுமதிக்கப்பட்டக் கடைகளில் 1 மீட்டர் தூரத்தைக் கடைப்பிடித்து முகக் கவசங்களையும் அணிவது நல்லது.
வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அந்த இடத்தின் சுகாதார நிறுவனங்களுக்கு தாங்கள் தங்குமிடத்தின் விலாசத்தைக் கூறி உடனடியாக அடையாளப்படுத்திக் கொண்டு 14 நாட்களுக்கு தங்களைத் தனிமைப்படுத்த வேண்டும்.
மேலும், விளையாட்டு வீரர்களுக்கான உடற்பயிற்சி – நடைப்பயிற்சி மற்றும் குழந்தைகளை வெளியே கொண்டுச் செல்லும் தகவல்கள் சம்மந்தமான தெளிவுப்படுத்தல்களும் பிரதமரால் கொடுக்கப்பட்டன.

உடற்பயிற்சி – நடைப்பயிற்சி மற்றும் குழந்தைகளுக்கான உலாத்தல்
வீட்டிற்கு அருகில் இருக்கும் பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள் போன்றவைக்குச் சென்று பொருட்கள் வாங்குவதைத் தவிர வேறு காரணங்களுக்காக வெளியே நடந்துச் செல்ல முடியாது.

குழந்தைகளுடன் வெளியே நடந்துச் செல்லலாம் என ஒரு தகவலை அரசாங்கம் வெளியிட்டதாகச் சொல்லப் படுவதற்கு எதிராக பிரதமர் பதிலளித்தார். அதாவது பெற்றோர் உணவுப் பொருட்கள், மருந்துகள் வாங்குவதற்கு வெளியே செல்லும் போது குழந்தைகளை, வீட்டில் தனியே விடமுடியாத பட்சத்தில், கூட அழைத்துச் செல்லலாம் என கூறப்பட்டதே தவிர இது வெளியே சுற்றுலா செய்வதற்கான அனுமதி கிடையாது.
பூங்காக்கள், பொது விளையாட்டு மைதானங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
நாயை வெளியே கொண்டுச் செல்வது என்றால் வீட்டிற்கு அருகில் குறுகிய நேரத்திற்கு மட்டுமே செல்லலாம்.

மருத்துவரிடம் செல்வதற்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்வதற்கும் வெளியே செல்லலாம்.
வெளியே சென்று உடற்பயிற்சி செய்வதற்கான தடைகள் தொடர்கின்றன. குறிப்பாக, வீட்டிற்கு அருகில் தனிப்பட்ட முறையில் உடற்பயிற்சி செய்யலாம். (ஒவ்வொரு மாநில ஆளுநர்களின் நெறிமுறைகளையும் கவனத்தில் கொள்ளவும்)

வாகனத்தில் செல்லும் போது தூரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். மோட்டார் வண்டியில் ஒருவர் மட்டும் தான் செல்லலாம்
நிரூபிக்கப்பட்ட வேலைக் காரணங்கள் மற்றும் சுகாதாரக் காரணங்களைத் தவிர ஒரு நகராட்சியிலிருந்து இன்னொரு நகராட்சிக்குப் போவதற்கான தடை. வசிக்குமிடத்தின் கடைகளில் தேவையான பொருட்கள் இல்லாத பட்சத்தில் பக்கத்து நகராட்சிக்குச் செல்லலாம். செய்தித்தாள்கள் வாங்குவதற்கு வெளியேச் செல்லலாம்.

வாகனத்தில் (Auto) செல்லும் போது ஓட்டுநரைத் தவிர இன்னொரு நபர் பின்பக்கத்தில் இருந்து செல்ல வேண்டும். மோட்டார் வண்டியில் ஒருவர் மட்டும் தான் செல்லலாம்.
வேலைக் காரணங்கள் மற்றும் ஏனைய முக்கிய காரணங்களுக்கு மட்டுமே மிதிவண்டியில் செல்லலாம்.

தொடர்ந்து செயல்படும் கடைகள்
உணவுப் பொருட்கள் மற்றும் வீட்டைச் சுத்தம் செய்வதற்கான பொருட்கள் விற்கும் கடைகள், மருந்தகங்கள், எரிவாயு நிலையங்கள், செய்தித்தாள் கடைகள், இயந்திர நிலையங்கள், வன்பொருள் கடைகள் அனைத்தும் திறந்திருக்கும். கணினி, தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் வாங்கலாம்.
மருத்துவமனைகளுக்குள்ளே இயங்கும் உணவகங்கள் திறந்திருக்கும்.
சிகையலங்கார நிபுணர்கள் மற்றும் அழகு மையங்கள் மூடப்பட்டுள்ளன.
துணிக்கடைகள், உடற்பயிற்சி நிலையங்கள், நீச்சல் குளங்கள் மற்றும் அனைத்து விளையாட்டு நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

சட்ட நிறுவனங்களின் திறப்பு. கட்டிடத் தளங்களின் வேலை நிறுத்தம்.
தொழில்துறை மற்றும் வணிக உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஆகையால், அத்தியயவசியமில்லாத அனைத்து நிறுவனங்களும் ஏப்ரல் 13 வரை மூடப்பட்டுள்ளன. வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் கடன் வங்கிகள் திறந்திருக்கும். தவிர்க்க முடியாத வேலைகள் மற்றும் Smart வேலைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கத்தின் பரிந்துரையாக இருந்தாலும், சட்ட
மற்றும் பொறியியல் நிறுவனங்கள் திறந்திருக்கலாம். மேலும், பயனக் கட்டுப்பாடுகள் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் பொதுப் போக்குவரத்து தொடர்ச்சியான முறையில் இயங்கும்.
கட்டுமானத்துறையின் முற்றுகைத் தொடர்கிறது. ஆனால், ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட உள்கட்டமைப்புக்களின் பராமரிப்பு மற்றும் புனரமைப்பும் தொடரப்படும்.

உங்கள் கவனத்திற்கு