ISEE 2022 – இணையத்தளத்தில் விண்ணப்பம் அனுப்புவதற்கான செயல்முறை

புதிய ஆண்டின் தொடக்கத்துடன், 2021 இல் உருவாக்கப்பட்ட ISEE சான்றிதழ் காலாவதியாகிவிட்டது: பல சலுகைகளை அணுகுவதற்கு, புதிய ISEE ஒன்றைக் கோருவது அவசியம். Reddito di cittadinanza போன்ற ஆதரவு நடவடிக்கைகளைப் பெறுபவர்களாக இருந்தால், சலுகையை இழக்காமல் இருக்க, புதிய ISEEஐ சனவரி இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான படிவத்தினை தன்னிச்சயாக INPS இணையத்தளம் ஊடாக சமர்ப்பிக்க முடியும்.

எவ்வாறு இதனைச் சமர்ப்பிக்க முடியும்? Inps இணையத்தளத்தில் உள்நுழைவதற்கு Spid அல்லது மின்னணு அடையாள அட்டை (carta d’identità elettronica) வைத்திருத்தல் வேண்டும். இந்த இரண்டில் ஒன்று இருக்கும் பட்சத்தில் INPS இணையத்தளத்தில் ISEE Precompilato எனும் பகுதிக்குள் சென்று படிவத்தினை நிரப்பலாம். ISEE Precompilato பகுதிக்குள் “acquisizione” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்தக் கட்டத்தில் சொந்தச் சான்றுகளுடன் (login) உள்நுழைய வேண்டும்.

ISEE Precompilato பகுதிக்குள் Dichiarazione Sostitutiva Unica (DSU) எனும் படிவம் காணப்படும். DSU என்பது ஒவ்வொரு குடும்ப அலகின் தனிப்பட்ட தரவுகள், வருமானம் மற்றும் பொருளாதார நிலைமையை உள்ளடக்கிய ஒரு ஆவணம். இது முன் நிரப்பப்பட்ட சில தரவுகளைக் கொண்டுள்ளது (அதாவது வசிக்கும் வீட்டின் வாடகை, சொத்துக்கள், Irpef வரிக்கான வருமானம்).

ISEE விண்ணப்பச் செயல்முறை

சுய அறிவிப்பு (Auto-dichiarazione)
குடும்பத்தின் தனிப்பட்ட தரவுகளை சுயமாக அறிவிக்க வேண்டும். மேலும், குடும்பத்தின் வீடு, வாகனங்கள், படகுகள், குடும்ப உறுப்பினர்களின் தன்னிறைவு இல்லாத நிபந்தனைகள், வருமானம், வீட்டுக் கடன், கணவன், மனைவி அல்லது குழந்தைகளுக்கு செலுத்தப்பட்ட கொடுப்பனவுகள் தொடர்பான தரவுகளை உள்ளிட வேண்டும்.

தரவு அனுப்புதல் (Trasmissione)
INPS ஆனது குடும்ப உறுப்பினர்களின் தரவுகளை Agenzia delle Entrateக்கு அனுப்பி வைக்கும்.

சரிபார்ப்புகள் (Controlli)
Agenzia delle entrate அனைத்து தரவுகளையும் சரி பார்த்து அவை நேர்மறையாக இருந்தால், DSUஐ நிரப்புவதற்கு INPSக்கு தரவுகளை அனுப்பி வைக்கும்.

INPS மின்னஞ்சல் (Email Inps)
DSU செயல்படுத்தப்பட்டதை அறிவிப்பதற்காக INPS ஒரு மின்னஞ்சலை ISEE கோருபவருக்கு அனுப்பி வைக்கும்.

DSU நிலையை அறிதல்
ISEE கோருபவர் INPS தளத்தின் முன் நிரப்பப்பட்ட ISEE அமைப்புக்குத் திரும்பி, அவருடைய DSU இன் நிலையைச் சரிபார்க்க வேண்டும். DSU “செயல்படுத்தப்பட்டால்” (“elaborata”), ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் முன்பே நிரப்பப்பட்ட தரவை ஏற்றுக்கொள்வது அல்லது மாற்றியமைப்பது அவசியம் மற்றும் கூடுதல் தரவை சுயமாக அறிவிக்க வேண்டும். DSU “இடைநிறுத்தப்பட்டிருந்தால்” (“sospesa”) தவறான ஒப்புகைத் தரவை மீண்டும் முன்மொழிய வேண்டும் மற்றும் புதிய செயலாக்கத்திற்காக காத்திருக்க வேண்டும்.

குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ISEE கோரிக்கைக்கான பிரதிநிதித்துவப் படிவத்தை (delega) உள்ளிடுவது அவசியம். இதைச் செய்ய, மேற்கூறிய படிவங்களையும் சுகாதார அட்டைகளின் எண்களையும் (tessera sanitaria) அதற்கான காலாவதித் திகதியையும் உள்ளிட வேண்டும். அனைத்து படிகளும் சரியாகச் செய்யப்பட்டு INPS மூலம் கணக்கிடப்பட்டு செயலாக்கப்பட்டால், இணையத்தில் சான்றிதழ் கிடைக்கும்.

உங்கள் கவனத்திற்கு