Assegno unico figli கோருவதற்கான வழிமுறைகள்

மார்ச் 1, 2022 முதல் Assegno unico figli எனும் சலுகையைப் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பம் அனுப்பலாம். Assegno unico என்பது 21 வயது வரை மற்றும் வயது வரம்பு இல்லாமல் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் குடும்பங்களுக்கான பொருளாதார ஆதரவாகும்.

குறிப்பாக Assegno unico figli கீழ் காண்பவர்க்கு வழங்கப்படும்:
– பிறக்கும் குழந்தைகள், கர்ப்ப காலத்தின் 7ஆவது மாதத்தில் இருந்து;
– குடும்பப் பொருளாதாரத்தில் சார்ந்திருக்கும் குழந்தைகள்;
– குடும்பப் பொருளாதாரத்தில் சார்ந்திருக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு 21 வயது வரை;
– வயது எல்லை இல்லாமல் மாற்றுத்திறனாளி பிள்ளைகள்.

இத்தாலி குடியுரிமை உள்ளவர்கள், வதிவிட உரிமை உள்ள ஐரோப்பிய நாடுகளின் குடிமக்கள் மற்றும் இத்தாலியில் தொடர்ச்சியாக அல்லது குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாக வசிக்கும் அல்லது குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு வேலை ஒப்பந்தம் கொண்ட வதிவிட உரிமை உள்ள வெளி நாடுகளின் குடிமக்கள் இதனைப் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பிக்கலாம்.

ISEE இன் படி கணக்கிடப்பட்ட வரி செலுத்துபவரின் வருமானத்திற்கு ஏற்ப கொடுப்பனவின் அளவு மாறுபடும். ஆகையால் இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர் ISEE செய்திருத்தல் அவசியம் ஆகும்.

  • 15 ஆயிரம் யூரோக்களுக்குச் சமமான அல்லது அதற்குக் குறைவான ஒரு Isee உடன், முழுத் தொகையும் செலுத்தப்பட வேண்டும், அதாவது ஒவ்வொரு 18 வயதிற்குட்பட்ட குழந்தைக்கும் மாதத்திற்கு 175 யூரோக்கள் அல்லது 18 முதல் 20 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு பிள்ளைக்கும் அல்லது வயது எல்லைகள் இல்லாமல் மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு 85 யூரோக்கள்;
  • ISEE 15 ஆயிரம் யூரோக்களுக்கு மேலும் 40 ஆயிரம் யூரோக்கள் வரை இருந்தால், தொகை படிப்படியாகக் குறைக்கப்பட்டு 50 யூரோக்கள் வரை (அல்லது 25) வழங்கப்படும்;
  • நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு, மாதத்திற்கு 100 யூரோக்கள் அதிகரிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது;
  • பிள்ளையின் 18 வயது வந்ததும் கொடுப்பனவின் அளவு குறைக்கப்பட்டு, மாற்றுத்திறனாளி பிள்ளையாக இல்லாத பட்சத்தில் 21 வயதுடன் ரத்து செய்யப்படும்.

INPS அல்லது patronato மூலமாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கப்பட வேண்டும். சுயாதீனமாக விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பவர்கள், Spid மூலம் INPS இணையத்தளத்தில் இணைந்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். ஜூன் மாதத்திற்குள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

உங்கள் கவனத்திற்கு