“அத்தியாவசியம் இல்லாத அனைத்து உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும்” இத்தாலி பிரதமரின் ஆணை

இத்தாலி பிரதமர் Giuseppe Conte

“இத்தாலி முழுவதும் அத்தியாவசியம் இல்லாத அனைத்து உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும்” என இத்தாலி பிரதமர் Conte ஆணையிட்டுள்ளார்

இரண்டாம் உலகப்போருக்கு அடுத்ததாக இருக்கும் இந்த வரலாற்றுமிக்க கடினமான நெருக்கடியில் இத்தாலி அரசாங்கம் மிக இறுக்கமான ஊரடங்கு சட்டங்களை அமுல்படுத்தி கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் 3 ஏப்ரல் வரை நடைமுறையில் இருக்கும்.

முகனூல் (Facebook) வழியாக வெளியிட்ட பதிவில், அனைத்து உணவுக்கடைகள் (supermercati e negozi alimentari) மற்றும் மருந்தகங்கள் (farmacie) மூடப்படாது என்றும் பிரதமர் உறுதிப்படுத்தினார். அனைவரையும் நிதானமாகவும் பதட்டமின்றியும் இருக்க கேட்டு கொண்டார்.

மேலும் தபால், நிதி, போக்குவரத்து போல் அத்தியாவசிய பொது சேவைகள் தொடர்ச்சியாக இயங்கும் என்ற உத்தரவாதத்தை அளித்தார்.

தொடர்ச்சியாக இயங்கக்கூடிய தொழிற்சாலைகளின் பட்டியல் 22 மார்ச் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். (பட்டியல் பார்ப்பதற்கு).

வேறு வழி இல்லாமல் இந்தக் கடினமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாயம். இந்த நேரத்தில் நாம் எம்மை பாதுகாத்துக் கொள்ளவேண்டும்

“பரவுதலை எதிர்ப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளின் பயன்களை காண சில காலம் எடுக்கும். இத்தாலியின் உற்பத்தி இதயத்துடிப்பின் வேகத்தை குறைத்து இருக்கிறோம், அதை முற்றும் முழுதாக நிறுத்தவில்லை. அரசாங்கம் உங்களுடன் உறுதியுடன் இருக்கிறது. மீண்டும் தலை நிமிர்ந்து வாழ்வதற்கான தீவிரமான நடவடிக்கைகள் நாம் முன்னெடுப்போம்.” என்று Conte தெரிவித்துள்ளார்.

உங்கள் கவனத்திற்கு