புதிய சுய அறிவிப்புப் படிவம் (AUTODICHIARAZIONE), உள்துறை அமைச்சகத்தின் புதிய படிவம்.

Controlli da parte della polizia

இன்று மார்ச் 17 அன்று உள்துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட வெளியே செல்பவர்களுக்கான புதிய படிவம், ஒரு முக்கியமான கூடுதல் பகுதியை கொண்டுள்ளது: நீங்கள் “தனிமைப்படுத்தலில்” இல்லை என்று அறிவிக்கப்பட வேண்டும்.

கொரோனாத்தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என சந்தேகத்துக்கிடமான நபர்கள் தங்களை தனிமைப்படுத்தல் வேண்டும் என்ற விதிமுறையையும் மீறி அவர்கள் வெளியே செல்வதை தடுக்கும் விதமாக இன்று உள்துறை அமைச்சகத்தினால் ஒரு புதிய உத்தரவு மற்றும் புதிய படிவம் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

?? புதிய படிவத்தினை தரவிறக்கம் செய்ய ??

புதிய படிவத்தில் ஒரு புதிய பகுதி இணைக்கப்பட்டுள்ளது, அதாவது “8 மார்ச் 2020 வெளியிடப்பட்ட ஆணைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் குறிப்பாக, சட்டப்பிரிவு 1 இன் அடிப்படையில் வைரசு தொற்றுக்கு ஆளாகியிருப்பவர்களும் அதனால் தனிமைப்படுத்தப்பட்டவர்களும் வெளியே செல்வதற்கான தடைக்குள் உள்ளாகவில்லை என ஒவ்வொரு தனி நபரும் அறிவிக்க வேண்டும்”.

உள்துறை அமைச்சர் Luciana Lamorgese கட்டளையின் படி, காவல் அதிகாரி அவர் முன்னிலையில் படிவத்தின் உண்மைத்தன்மையை விசாரித்து படிவத்தின் உரிமையாளரின் அடையாளத்தையும் உறுதிசெய்யும் கடமையில் ஈடுப்படவேண்டும்.
இந்த வழியில் குடிமகன் தனது அடையாள ஆவணத்தின் புகைப்பட நகலை சுய அறிவிப்புப் படிவத்துடன் இணைக்கும் கட்டாயத்தில் இருந்து விலக்கப்படுகிறார்.

பழைய படிவங்களை போலவே(இன்றிலிருந்து இவற்றை உபயோகிக்க முடியாது) இந்த புதிய படிவமும் ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளியே செல்லும்போதும் கொண்டு செல்லவேண்டும். ஒரு வழக்கமான நகர்வை மேற்க்கொள்ளும் பட்சத்தில் ஒரு படிவம் நிரப்புவது போதுமானது (உதாரணம்: வீடு-வேலை)
உங்களால் படிவத்தை அச்சிட முடியாவிட்டால் – உதாரணமாக, உங்களிடம் ஒரு அச்சுப்பொறி (Stampante) இல்லை – அல்லது அதை மறந்துவிட்டு வந்தால், நீங்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்படும் பட்சத்தில், நீங்கள் அவற்றை ஒரு வாய்மொழி அறிவிப்பு மூலம் தெரிவிக்கலாம், அவை எழுதப்பட்டு மற்றும் அவற்றின் உண்மைத்தன்மை விசாரிக்கப்படலாம். தடைகளை மீறுபவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்: 206 யூரோக்கள் வரை அபராதம், மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை மற்றும் பொது சுகாதாரத்திற்கு எதிரான தீங்கிழைக்கும் குற்றங்களுக்கான வழக்கும் பதியப்படலாம்.

“நிரூபிக்கப்பட்ட வேலை தேவைகள்” அல்லது அவசியமான குடும்ப, சுகாதாரத் தேவைகள் இல்லாவிட்டால் நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அரசாங்க ஆணை கோருகிறது என்பதை நினைவில் கொள்வது நல்லது.
வீட்டு அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்ல வேண்டிய அவசியம் அல்லது மருந்தகத்திற்குச் செல்வது போன்ற பிற காரணங்களுக்காகவும் வெளியே செல்ல முடியும் (நகர்வுகளுக்கான விதிமுறைகள் இங்கே காணலாம்),

மேலும், சமூக தொடர்புகள் குறைக்கப்பட வேண்டும் .
ஒரு அரசாங்க குறிப்பு, விதிகளுக்கு வழங்கப்பட வேண்டிய சரியான விளக்கத்தை விளக்கிக்கூறுகிறது. அதாவது – மிகவும் முக்கியமான அவசியமான காரணங்களுக்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும் – மற்றும் இத்தாலிய மக்களுக்கான கோரிக்கைகளின் உந்துதல் காரணம் என்னவென்றால்: இன்றுவரைக்கும் இத்தாலியில் 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் ஆகையால் இந்த வைரசுத்தொற்றின் பரவுதலை நிறுத்தவேண்டும் என்பதே ஆகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

உங்கள் கவனத்திற்கு