கொரோனாவைரசு நகர்வுகளுக்கான விதிமுறைகள் – கேள்வி பதில்

Spiegazione #IoRestoACasa

கொரோனா வைரசு நகர்வுகளுக்கான விதிமுறைகள் பற்றிய கேள்வியும் பதிலும்.

1.         நான் இத்தாலிக்குள் நடமாடலாமா ?

சரியான மற்றும் முக்கியமான காரணங்கள் அன்றி வீட்டைவிட்டு  வெளியேரக்கூடாது.

10 மார்ச் முதல் 3 ஏப்ரல் 2020 வரை அனைத்து இத்தாலிய பிராந்தியத்திற்கும் இந்த  நடைமுறை அமுல்படுத்தப்படுகிறது. காவல்துறையினரால் இதற்க்குரிய கண்காணிப்புகள் நடைபெறும்.

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் மற்றும் அதனால் தனிமைப்படுத்தப்பட்டவர்களும் வீட்டைவிட்டு வெளியேற தடைசெய்யப்பட்டுள்ளது.

சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் 37,5 இற்குக் கூடிய உடல் வெப்பநிலை உள்ளவர்கள் தங்களை தனிமைப்படுத்தி தங்களது குடும்ப வைத்தியரை  அணுகும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள் மற்றும் இவர்கள் முக்கியமாக வீட்டைவிட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது.

2.         நான் வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு சரியான காரணங்கள் எவை ?

நீங்கள் வேலைக்கு செல்பவராய் இருந்தால் அல்லது  உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவராயின் அல்லது அவசர தேவைகள் இருப்பின் வெளியே செல்வதற்கான அனுமதி உண்டு.

ஒவ்வொருமுறையும் வெளியே செல்லும்பொழுது  வெளியே செல்லும் காரணம் குறிப்பிடப்பட்ட AUTODICHIARAZIONE (இங்கே தரவிறக்கம் செய்யவும்) எனும் படிவம் வைத்திருத்தல் வேண்டும். எழுதுவதின் உண்மைத்துவம் விசாரிக்கப்படும்.

3.         தற்போது நான் எனது வதிவிடத்தைவிட்டு வெளியிடத்தில் இருப்பவராயின் திரும்ப எனது வதிவிடத்திற்கு வரலாமா?

 ஆம், வேலை நிமித்தம் அல்லது மருத்துவ  மற்றும் அத்தியாவசிய  தேவைகளுக்காக மட்டுமே நீங்கள் போய்வரலாம்.

4.         நான் எனது வதிவிடத்தில் இருந்து வேறொரு பிராந்தியத்தில் வேலை செய்பவராயின் எப்படி போய்வருவது ?

உங்கள் வேலைக்கான தகுந்த ஆதாரத்தினை காட்டும் பட்ச்சத்தில் நீங்கள் போய்வர அனுமதி உண்டு.

5.         பொது போக்குவரத்தினை பயன்படுத்தலாமா?

ஆம், செய்யலாம். அதற்க்கான தடைகள் எதுவும் இல்லை. அரசு மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவைகள் ஒழுங்கான நடைமுறையில் உள்ளன.

6.         அத்தியாவசிய உணவுத் தேவைகளுக்காக வெளியே செல்லலாமா?

ஆம், அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்திற்கு எந்தவொரு தடைகளும் விதிக்கப்படவில்லை ஆதலால் எப்பொழுதும் அனைத்து விற்பனை நிலையங்களிலும் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். அநாவசிய தேவைகளுக்காக வெளியே செல்வதை  தவிர்த்துக்கொள்ளவும் .

7.         நான் என் உறவினர்களை சந்திக்கலாமா?

இல்லை, ஏனென்றால் இது ஒரு அவசியமான நகர்வு இல்லை மற்றும் இது மேற்குறிப்பிட்ட காரணங்களில் உள்ளடங்கவில்லை.

8.         முதியோர்களை சந்தித்து உதவி செய்யலாமா?

ஆம், ஆனால் முதியோர்கள் இலகுவில் தொற்றுகளுக்கு உள்ளாகக்கூடியவர்கள் என்பதால் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்.

9.         வெளியில் உடற்பயிற்சி மேற்கொள்ள அனுமதி உண்டா?

ஆம், ஆனால்  நெரிசல்களை தவிர்த்து 1 மீட்டர் இடைவெளியை கருத்தில்கொண்டு உடற்பயிற்சிகளை  மேற்கொள்ளலாம்.

10.       மேல்  குறிப்பிடப்பட்ட விதிமுறைகளை மீறுபவருக்குறிய அபதாரங்கள் எவை?

விதிமுறைகளை மீறுபவருக்கு இத்தாலிய சட்டத்தின் அடிப்படையின்கீழ் (articolo 650 codice penale) 3 மாதம் வரை சிறைத் தண்டனை அல்லது 206 யூரோக்கள் வரை அபதாரம் விதிக்கப்படும். அதிகபட்ச விதிமுறைகளை மீறுபவர்களுக்கு இதைவிட கடுமையான அபதாரங்கள் விதிக்கப்படும்

Spiegazione #IoRestoACasa

உங்கள் கவனத்திற்கு