சீனாவிலிருந்து மருத்துவ வல்லுநர்கள் அணி உதவிப் பொருட்களுடன் ரோமில் தரையிறங்கியது

இரவு 22.50 – சீனாவிலிருந்து உதவிப் பொருட்களுடன் விமானம் ஒன்று ரோமில் தரையிறங்கியது.
ஷங்காயில் இருந்து China Eastern A-350 எனும் விமானம் கொரோனா வைரசை எதிர்க்கொள்வதற்கான 31 ton மருத்துவ உதவிப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மற்றும் 9 மருத்துவ வல்லுநர்கள் கொண்ட ஒரு உதவி அணியும் இன்று இரவு 22.30 மணிக்கு Fiumicino விமான நிலையத்தில் தரையிறங்கியது.


இவர்கள் சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு (National Health Commission of China) மற்றும் சீனாசெஞ்சிலுவைச் சங்கத்தைச் (Red Cross Society of China) சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள்.


இவ் விமானத்தைப் பற்றி கடந்த நாட்களில் இத்தாலி மற்றும் சீனா அரசாங்கங்கள் இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் Luigi di Maio மற்றும் Wang Yi மூலம் அறிவித்தன. ரோம் சீன தூதர் Li Junhua விமானம் தரையிறங்கிய போது கலந்து கொண்டார்.

உங்கள் கவனத்திற்கு