தொழிலாளர் சங்கத்தினர்களுக்கும் (sindacati) நிறுவனங்களுக்கும் (imprese) இடையே கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம்.

இத்தாலி அரசாங்கத்தின் அனுசரணையுடன் “பணியிடத்தில் கொரோனாவைரசு பரவுதலை தடுப்பதற்கான நெறிமுறை” ஒப்பந்தம் இன்று 14 மார்ச் தொழிலாளர் சங்கத்தினர்களுக்கும் (sindacati) நிறுவனங்களுக்கும் (imprese) இடையே கைச்சாத்திடப்பட்டது.

இவ் உடன்பாட்டின் முக்கிய உள்ளடக்கங்கள் இங்கே.

  1. வேலைத்தளத்தின் நுழைவாயிலில் ஊழியர்களின் வெப்பநிலையின் அளவீடு செய்தல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியின் போது சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக முதலாளியிடம் தெரிவிக்க வேண்டும் என ஊழியர்கள் கேட்கப்படுகிறார்கள்.
  2. முடிந்தால், ஓட்டுநர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் இருக்க வேண்டும்: பொருட்களின் ஏற்றுதல் மற்றும் இறக்குதல் நடவடிக்கைகளைத் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் அலுவலகங்களுக்குள் அணுகல் அனுமதிக்கப்படாது.
    ஒவ்வொரு ஊழியர்களின் வேலை மாற்றத்திற்கு பிறகும் விசைப்பலகைகள்(keyboard), தொடுதிரைகள்(schermo touch), சுட்டி (mouse) ஆகியவற்றை பொருத்தமான சவர்க்காரங்களைக் கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும். அலுவலகங்களிலும், உற்பத்தித் துறைகளிலும் ஒரு மீட்டர் இடைவெளியை கடுமையாக கடைப்பிடிக்கவேண்டும்.
    நிறுவனங்களுக்கு வரும் ஏனைய நபர்களுக்கு (fornitori / trasportatori) அல்லது பிற வெளிப்புற பணியாளர்களுக்குத் தேவையான பிரத்யேக சுகாதார பாதுகாப்பு முறைகளை அடையாளம் காணவும் / நிறுவவும் வேண்டும்.
  3. நிறுவனம் ஒவ்வொரு ஊழியர்களின் நேர மாற்றத்தின் முடிவிலும் இடத்தை சுத்தம் செய்தல் வேண்டும். மற்றும் அலுவலகங்களிலும் உற்பத்தித் துறைகளிலும் விசைப்பலகைகள்(keyboard), தொடுதிரைகள்(schermo touch), சுட்டி (mouse) ஆகியவற்றிற்கு பொருத்தமான சவர்க்காரங்களைக் கொண்டு அவ்வப்போது சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்க்கொள்ளவேண்டும் .
    பொதுவாக, அவ்வப்போது பணியிடத்தின் சுத்திகரிப்புக்கு நிறுவனங்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
  4. உலக சுகாதார அமைப்பின் (OMS) அறிவிப்பின்படி, இந்த வைரசின் அறிகுறிகள் அற்றவர்கள் முகமூடி அணிய வேண்டிய கட்டாயம் இல்லை.
    ஒருவருக்கொருவர் 1 மீட்டருக்கு குறைவான தூரத்தில் பணிபுரிய வேண்டும் என்ற பட்சத்தில், அதற்க்குரிய பிற தீர்வுகள் சாத்தியமில்லை என்றால், முகமூடிகள் மற்றும் பிற பாதுகாப்பு சாதனங்களை (கையுறைகள், கண்ணாடி, உடைகள், ஹெட்ஃபோன்கள் போன்றவை) பயன்படுத்தவேண்டும்.
  5. உற்பத்தித் துறை மற்றும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ஸ்மார்ட் வேலையைப் பயன்படுத்துவதன் மூலம் அல்லது தொலைதூரத்திலும் செயல்படக்கூடிய வேலைத் துறைகள் தவிர மற்ற அனைத்து துறைகளும் மூடப்பட்டுள்ளன.
    ஊழியர்களின் சந்திப்புக்களை தவிர்க்கும் முறையில் வேலை நேரமாற்றங்கள் மேற்க்கொள்ளப்படவேண்டும்.
  6. பொதுவான பகுதிகளில் (நுழைவாயில்கள், உடை மாற்றும் அறைகள், உணவு விடுதிகள்) தொடர்புகளைத் தவிர்ப்பதற்காக நுழைவு/ வெளியேறும் நேரங்களை மாற்றியமைப்பதற்காக முயற்சிகள் மேற்க்கொள்ளப்படுகின்றன.
    முடிந்தவரை, இந்த பகுதிகளில் ஒரு நுழைவு மற்றும் வெளியேறும் வாயில் அமைக்கப்பட்டு மற்றும் அங்கு சவர்க்காரங்கள் இருப்பதை உறுதி செய்வது அவசியம்.
  7. வேலையிடத்தில் இருக்கும் ஒரு நபருக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சுவாச நோய்த்தொற்றின் அறிகுறிகள் ஏற்பட்டால், அவர் அதை உடனடியாக பணியாளர் அலுவலகத்தில் அறிவித்து மற்றும் சுகாதார அதிகாரத்தின் விதிகளின்படி அவர் தன்னை அவ்விடத்தில் இருந்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். நிறுவனம் உடனடியாக இதற்க்குரிய சுகாதார அதிகாரிகளுக்கும், பிராந்தியத்தால் அல்லது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட COVID-19க்கான அவசர எண்களை தொடர்பு கொண்டு அறிவிக்க வேண்டும்.
  8. தொழிற்சாலைகளில் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உற்பத்தியை நிறுத்துவதற்கான சாத்தியங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இந்த நிலையில், ஊழியர்கள் தற்காலிகமாக பணிநீக்கத்தில் இருப்பார்கள்.

11 மார்ச் வெளிவந்த ஆணைப் பதிவுடன் இந்த நெறிமுறை இணைக்கப்படும்.
முழு ஒப்பந்தத்தை இத்தாலி மொழியில் வசிப்பதற்கு.

உங்கள் கவனத்திற்கு