இத்தாலி வைரசு ஆராய்ச்சி வல்லுநர் Capobianchi “இறுக்கமான சட்டங்களின் விளைவுகளை இத்தாலி வட மாகாணங்களின் புள்ளிவிபரங்கள் மூலம் பார்க்கலாம்”

“Lombardia, Veneto மற்றும் Emilia-Romagna வில் இருக்கும் நிலைமை இத்தாலி முழுவதிலும் இடம்பெறலாம் என்று ஒரு ஆபத்து இருக்கின்றது. இந்த அவசரக்காலச் சட்டங்கள் வைரசின் பரவுதலை குறைக்கும் என்று நம்புகின்றோம்.”

“13.03.2020 அன்று வெளியாகிய புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தொற்று நோய் ஆரம்பித்த பகுதிகளில் வைரசின் பரவுதல் குறைந்து வந்தாலும் ஏனையப் பகுதிகளில் வைரசின் பரவுதல் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. ஆகையால், இத்தாலி வட மாகாணங்களில் புதிய தொற்று நோயால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும் காலப்போக்கில்தான் ஒரு தெளிவான முன்கணிப்பைக் கூறலாம்.”

டிசம்பர் பிற்பகுதியில் சீனாவில் ஆரம்பிக்கப்பட்டதோடு ஒப்பிடும்போது கொரோனாவைரசின் தோற்றம் மாறிவிட்டதா?

“அணைத்து வைரசுகளும் தங்களை விரிவாக்கம் செய்து பரவுவதற்கு இடத்தை தேடும். டிசம்பர் மாதம் Wuhan இல் சீன ஆராய்ச்சியாளர்களால் காணப்பட்ட முதலாவது வைரசுக்கும் இன்று சர்வதேசம் முழுவதும் பரவும் வைரசுக்கும் மாற்றங்கள் இல்லை. கண்டறியும் மாற்றங்கள் இடம்பெற்றால் இந்த வைரசை இனம் காண முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தள்ளப்படுவோம்.”

2009 இல் பரவிய Sars தொற்று நோய்க்கும் இன்று பரவுகின்ற “CoViD-19” க்கும் ஒற்றுமைகள் இருக்கின்றதா?

“இரண்டு வைரசுக்கும் 80% ஒற்றுமை இருக்கின்றது. ஆனால் Sarsஇன் நடத்தை வித்தியாசமானது. Sarsஇன் இறப்பு வீதம் அதிகமாக இருந்தாலும் (10%) அந்த நோயை இனம் காணுவதற்கு மிக சுலபமாக இருந்தது. இன்று பரவுகின்ற கொரோனா வைரசின் அறிகுறிகளை இனம் காணுவது கடினமாகக் இருக்கின்றது. அதனால் பரவுதலை குறைப்பதும் மிகக் கடினமாக இருக்கின்றது.”

கொரோனாவைரசின் பரவுதல் தொடக்கத்தின் போது SARS-CoV-2 எனும் இந்த மரபணு வைரசை தனிமைப்படுத்தி அதை GenBank இல் பதிவேற்றியே ஐரோப்பாவின் முதல் ஆராய்ச்சி மையம் இத்தாலி நாட்டைச் சேர்ந்த Spallanzani ஆராய்ச்சி நிறுவனம். இந்த அணியை மருத்துவ வல்லுநரான Capobianchi Maria Rosaria தலைமைத் தாங்கினார்.

கொரோனா வைரசு பரவுதலால் இத்தாலியில் விதிக்கப்பட்ட அவசரக்கால சட்டங்கள் சம்மந்தமாக கேள்விகள் மற்றும் உதவிகள் பெறுவதற்கு எம்மை தொலைபேசி ஊடாக தொடர்புகொள்ளலாம்.

உங்கள் கவனத்திற்கு