இத்தாலி பலெர்மோவில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2024

இத்தாலி, பலெர்மோ தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில்…
இனத்தின் வலிசுமந்த நாளாகிய, முள்ளிவாய்க்கால் மே 18 இன், 15ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 18/05/2024 இன்று, இத்தாலி, பலெர்மோ மாநகரில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
இந்நிகழ்வானது 2022ம் ஆண்டு, பலெர்மோ மாநகர ஆளுநரின் அனுமதியுடன், முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்து மரம் நாட்டப்பட்ட பூங்காவில் (Giardino dei Giusti) இடம்பெற்றது.
மேலும், தேசியக் கொடியினை வண. பிதா பீற்றர் அடிகளார் அவர்களும், இத்தாலியத் தேசியக் கொடியினை பலெர்மோ மாநகர துணை ஆளுநர் Fabrizio Ferrandelli அவர்களும், ஏற்றி வைத்தனர். முள்ளிவாய்க்காலில் தமது உயிரை ஈந்த அனைவருக்குமான பொதுச்சுடரேற்றப்பட்டு, முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான மலர்மாலை அணிவித்ததுடன், அகவணக்கம், சுடர்வணக்கம், மலர்வணக்கம் என்பன நடைபெற்றது.
இவ்வணக்க நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த உரைகளை இத்தாலியப் பிரமுகர்கள் உட்பட பலரும் வழங்கியிருந்தனர்.
திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பலெர்மோ தமிழ் இளையோர்கள் மற்றும் எம்தமிழ் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இறுதியில் தமிழீழத் தேசியக்கொடி, இத்தாலியத் தேசியக்கொடிகள் இறக்கலுடன், “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” எனும் பாடல் இசைக்கப்பட்டு, உறுதிமொழி எடுக்கப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் வழங்கப்பட்டது

உங்கள் கவனத்திற்கு