5×1000 அன்பளிப்பு – இத்தாலி தமிழ்க் கல்விச்சேவை

இத்தாலி தேசத்தில் எம் ஈழத்தமிழரின் வழிவந்தவர்கள் தமிழ் மொழியை, பண்பாட்டை அறிந்து கற்றுணர்வது மட்டுமின்றி புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்தாலும் எம் இன அடையாளங்களுடன் வாழவேண்டும். அதற்கு அடிப்படையான தாய்மொழிக் கல்வியை வழங்கும் நோக்குடன் நீண்ட காலமாகப் பணி செய்து வருவதே இத்தாலி தமிழ்க் கல்விச்சேவை என்பதை அனைவரும் அறிவோம்.

தற்போது இத்தாலியில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட இவ்வமைப்பிற்கும் வருடாந்த வரிக்கணக்கீடு (730 அல்லது modulo unico) செய்யும் போது அன்பளிப்பு (5×1000) வழங்கலாம். 730 அல்லது modulo unico செய்யும்பொழுது படிவத்தில்  குறித்த எண்ணை 90076130021 எழுதி கையெழுத்தை இடுவதன் மூலம் இந்த நன்கொடையை வழங்கலாம்.  உங்கள் நண்பர்களுக்கும் இந்தத் தகவலை அறியத்தந்து ஆண்டுதோறும் இது தொடர்பான உதவியையும், ஒத்துழைப்பையும் வேண்டிநிற்கின்றோம்.
                

நன்றி

உங்கள் கவனத்திற்கு