உறவை வளர்ப்போம் – தாயகத்தைச் சென்றடைந்த கற்றல் உபுகரணங்கள்

கல்வி என்பது ஒரு இனத்தின் பரிணாமத்தைத் தாங்கி நிற்கும் தூண், அந்த வகையில் தமிழீழத்தில் வாழும் எமது இளையோர்களின் கல்வியை சிதைப்பதில் இலங்கை அரசாங்கம் அன்று முதல் இன்று வரை முளுமூச்சாக செயல்பட்டு வருகின்றது எனப்தில் எந்த சந்தேகமும் இல்லை – 1971இல் தரப்படுத்தல் சட்டம் முதல், இன்று போதைத் திணிப்பு வரை தமிழ் சந்ததியை சிதைப்பதில் இலங்கை அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அதைக் கருத்தில் எடுத்து எம் இத்தாலி வாழ் இளையோர்களால் 2020இல் உறவை வளர்ப்போம் எனும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது, அதன் முதல் கட்டமாக கற்றல் உபகரணங்களை இத்தாலி வாழ் மக்களின் ஆதரவுடனும், திலீபன் தமிழ்ச் சோலைகளின் பங்களிப்புடனும் சேகரிக்கப் பட்டன. ஏனைய உபகரணங்கள் தாயகத்தை இந்த மாதம், பல நெருக்கடிகளைத் தாண்டி சென்றடைந்துள்ளன. ஒருபகுதி உபகரணங்கள் மாங்குளத்தை அண்டிய கிராமங்களான பனிக்குளம், கிழவி குளம், புதிய கொலனி, கற்குவாரி மற்றும் நீதி புரத்திலுள்ள மொத்தம் 48 மாணவர்களுக்கு வழங்கப்பட்டன, இனி வரும் நாட்களில் உபகரணங்களை வழங்கும் பணிகள் ஏனைய கிராமங்களிலும் தொடரும். ஒரு தரமான கல்விக்காக ஏங்கும் எம் மாணவச் செல்வங்களுக்கு இந்த உபுகரணங்கள் அவர்களின் கல்வி வேட்கையை ஊக்குவித்து, பல துரைகளில் ஆற்றல் உள்ள சமூகமாக உருவாக வேண்டும் என்ற எங்கள் இலக்கை அடைவதற்கு உந்துகோலாக இருக்கும் என நம்புகின்றோம். இந்த திட்டத்தின் முதல் கட்டம் மாணவர்களின் தேவைகளி்ன் ஒரு சிறு விளுக்காடைத் தான் சென்றடையும் என்பதை அறிந்த நாம், உறவை வளர்போம் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக ‘வாகை கல்வி நிலையம்’ அமைக்கப்படது.
இரு திட்டங்களையும் கொண்டு நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த எம் இத்தாலி வாழ் தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு இன்னும் இது போன்ற முயற்சிகளை மென்மேலும் சிறப்பாக கொண்டு நடத்த உங்கள் ஒத்துழைப்பை இத்தாலி வாழ் இளையோர்களாகிய நாமும், தாயகத்தில் வாழும் மாணவர்களும் எதிர்பார்க்கின்றோம்.

உங்கள் கவனத்திற்கு